நான் ஒரு ஊட்டச்சத்து மருத்துவ நிபுணராக….! – சுஜாவிற்கு சத்யராஜ் மகள் திவ்யா கடிதம்

Loading...

பிரபல தொலைகாட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கடிதத்தால் சுஜா நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

 

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதியில் ஆரவ் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடும் சர்ச்சைக்கு ஆளானவர்கள் பட்டியலில் சுஜாவும் ஒருவர். ஓவியாவை போன்று நடிக்க முயற்சிக்கிறார், எதற்கெடுத்தாலும் அழுகிறார் என்று பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள சூழலில் சுஜாவுக்கு, சத்யராஜின் மகள் திவ்யா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை சுஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் திவ்யா சத்யராஜ் கூறியிருப்பதாவது:

எந்த ஒரு குறையையும் எதிர்கொள்ள மனவலிமையும், உறுதியுமே முக்கியம் என ஒரு ஊட்டச்சத்து மருத்துவ நிபுணராக என்னிடம் வரும் நோயாளிகளிடம் எப்போதும் சொல்லி வருகிறேன். நிகழ்ச்சியில் உங்கள் வலிமையும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே உந்துதலாக இருந்தன.

 

நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே என் தந்தை எனக்கு சிறந்த நண்பராக இருந்து வந்துள்ளார். தந்தை இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு சவாலாக இருக்கும் என என்னால் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் தைரியமான, அழகான பெண். உங்கலை நினைத்து பெருமை கொள்கிறேன். எனக்குப் பிடித்த பிக் பாஸ் போட்டியாளர்களில் நீங்களும் ஒருவர்.

வெற்றியாளர்களென்றால் எப்போதும் தோற்காதவர்கள் அல்ல, எப்போதும் போட்டியை விட்டுச் செல்லாதவர்கள். நல்ல க்ரீன் டீ, ஆரோக்கியமான சிற்றுண்டியோடு சந்திப்போம். தொடர்பில் இருங்கள்.

இவ்வாறு கடிதத்தின் மூலம் சுஜாவிற்கு திவ்யா சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.

Loading...
1860
-
100%
Rates : 1