கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என்று சொன்னது இதற்காக தான், பல கொடுமை இருந்தது- ஜுலி ஓபன் டாக்

Loading...

பிக்பாஸ் முடிந்து தற்போது அதன் போட்டியாளர்கள் அனைவருமே பல தளங்களில் பேட்டியளித்து வருகின்றனர். இதில் ஜுலி பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘நான் உள்ளே பல கொடுமைகளை அனுபவித்தேன், வெளியே வந்த பிறகு மக்கள் அதைவிட பல கொடுமைகளை தருகிறார்கள்.

முதல் நாள் என்னை வரவேற்க கூட ஆள் இல்லை, அதை தான் என்னை கட்டிப்பிடித்து வரவேற்க ஆள் இல்லை, மற்ற அனைவருக்குமே இருந்தது என கூறினேன்.

ஆனால். மக்கள் அதை தவறாக புரிந்துக்கொண்டார்கள், இதை கூட சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால் நான் என்ன செய்ய?, பிறகு ஓவியா விஷயத்தில் என்னை அனைவரும் திட்டுகின்றார்கள்.

ஓவியா மனதளவில் உடைந்த போது கூட அவருக்கு நிறைய பேர் ஆறுதல் கூறினார்கள், ஆனால், எனக்கு ஆறுதல் கூற யாருமே இல்லை’ என மனம் நொந்து பேசியுள்ளார்.

 
Topics : #Kollywood

Loading...
783
-
Rates : 0