விஜய்யும் இல்லை, சூர்யாவும் இல்லை! பிரபல நடிகரை வளைக்கிறது பிக்பாஸ் 2 டீம்

Loading...

விஜய் டிவியில் கடந்த 100 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் திருவிழா ஒருவழியாக முடிவுக்கு வந்தது. பெண்களை சீரியலில் இருந்து யாராலும் வெளியே கொண்டு வர முடியாது என்று காலங்காலமாக இருந்த வழக்கத்தை பிக்பாஸ் உடைத்தது. பெரும்பாலான பெண்கள் சீரியல்களை மறந்து பிக்பாஸ் ரசிகைகளாக மாறினர்.

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதை அடுத்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தின் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறாது. 2ஆம் பாகத்தை கமல் தொகுத்து வழங்கப்போவது இல்லை என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை சூர்யா அல்லது விஜய் தொகுத்து வழங்குவார் என்று வதந்திகள் வெளியாகி வந்த நிலையில் இவர்கள் இருவருமே இல்லை என்பதை சேனல் நிர்வாகிகள் உறுதி செய்துவிட்டனர்.

மேலும் டிவி தரப்பில் இருந்து தற்போது அரவிந்தசாமியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரவிந்தசாமி தொகுத்து வழங்கிய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

 
Topics : #Kollywood

Loading...
414
-
100%
Rates : 1