என்னோட 20 வருஷ கனவு நிஜமானது..! – சிலிர்க்கும் நடிகை நீலிமா ராணி

Loading...

கமல், சிவாஜி நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா ராணி. அதைத் தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80 -க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

 

தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் முரளி – நிஷ்மா – அஸ்மிதா நடிக்கும் தொலைக்காட்சித் தொடரான ‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற தொடரை ‘ஜீ தமிழ்’ சேனலுக்குத் தயாரித்து வழங்கயிருக்கிறது. முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, கௌதமி, ரவி, டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

படப்பிடிப்பு நாகர்கோவில் முட்டம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து நீலிமா பேசுகையில், “இது எனது 20 வருடக் கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாகத் தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் கூடிய விரைவில் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக மாறவிருக்கிறோம்” என்று கூறினார். இத்தொடர் இனியன் தினேஷ் இயக்கத்தில் வரும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்குத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது” என்றார் சிலிர்ப்புடன்

Loading...
1982
-
Rates : 0