ஒரு பாவாடைக்காக 8 வருடங்கள் இடம்பெற்ற வழக்கு! .

Loading...

டெல்லியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது திருமணத்திற்காக லெஹாங்கே (lehanga) என்று கூறப்படும் திருமண உடையை தைக்க கொடுத்திருந்தார். இது நம்மூர் பாவாடையை போல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தன்று பாவாடையை வாங்கும்பொழுது, அதன் உயரம் அவர் கொடுத்த அளவைவிட 2 இன்ச் குறைவாக இருந்ததாம். உயரத்தை சரிசெய்து கொடுக்கும்படி அந்த பெண் கேட்டபோது அதிகப்படியான வேலைப்பளு இருந்ததால் டிசைனர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் தொடுத்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதியில் தற்போது டிசைனர் ரூ.50,000 அபராதமும், அந்த பாவாடையின் மதிப்பான ரூ.14 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.64 ஆயிரம் அந்த பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டது.

Loading...
670
-
Rates : 0