பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தூங்க போனதுக்கு அப்புறம் நானும், ஓவியாவும்..”

Loading...

தமிழ் நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. அதில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீ முதலில் வெளியேறினாலும், அனுயாதான் முதல் எலிமினேட் ஆன நபர்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிந்திருக்கும் நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார் நடிகை அனுயா. அவர் கூறியுள்ளதாவது கமல் சார் என்னை தமிழரசி என்று அழைத்தது என்மீது கொண்ட அன்பை அது உணர்த்தியது. கமல் சார் ஒரு ஸ்வீட் ஹார்ட். எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் கமல் சார் தான். நான் அதை நினைக்கும் போதெல்லம் வானத்தில் இருப்பதாக தோணுவதோடு ஒவ்வொரு முறையும் என்னை ஃப்ரெஷ்ஷாக வைக்கும்.”

மேலும். கமல் சாருக்கு ஒரு பெரிய பவர் இருக்கு. அதுதான் மக்களின் அன்பு. அது இருந்தால் நீங்கள் இந்த உலகையே மாற்ற முடியும். அவர் ஒரு நல்ல தலைவராக இருப்பார்னு நான் நினைக்கிறேன். அவர் நியாயத்தின் பக்கம் நிற்பவர்.’’

பிக்பாஸ் வீட்டில் இருந்த  யாருக்கும் என்மீது  தனிப்பட்ட வெறுப்பு இல்ல. எதிர்பாராமல் நான் வெளியேறுற சூழ்நிலை வந்துடுச்சு. ஓவியாவுக்கு என்னுடன் இருப்பது மிகவும் பிடிக்கும். எல்லாரும் தூங்க போனதுக்கு அப்பறம் இரவின் அமைதியில் நான் பாடுவதை கேட்க ஓவியாவுக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி என்னைப் பாடல்களை பாடச்சொல்லி கேட்பார். நானும் தயக்கப்படாமல் பாடுவேன்”. என்று கூறியுள்ளார் நடிகை அனுயா.

Loading...
909
-
Rates : 0