நான் பிக்பாஸ் வீட்டுக்கு மீண்டும் செல்லலாம் என்றிருந்தேன்..! – இவர் தான் என்னை தடுத்துவிட்டார்

Loading...

பிக் பாஸ் வீட்டிற்கு தான் ஏன் திரும்பி வரவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஓவியா.

 

கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் இருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிலைமையே வேறு. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.அவரது மார்க்கெட்டும் சூப்பராக பிக்கப்பாகிவிட்டது.ஆரவை காதலித்து அதை அவர் ஏற்காததால் மனமுடைந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா. அவரை மீண்டும் அழைத்து வர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெரும் முயற்சி செய்தனர்.

ஓவியா கிளம்பிய கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி படுத்து தூங்கிவிட்டது. இதனால் எவ்வளவு பணம் கொடுத்தாவது ஓவியாவை அழைத்து வர முயன்றார்கள்.மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வாங்க என்று ரசிகர்களும் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் ஓவியா வரவில்லை. நிகழ்ச்சியின் 100வது நாள் மட்டுமே வந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்ல ஓவியாவுக்கு சம்மதமாம். ஆனால் அங்கிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை பார்த்த அவரின் அப்பா தான் வேண்டாம்மா உனக்கு பிக் பாஸ் வேண்டாம்மா என்று கூறிவிட்டாராம். இதை ஓவியாவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Loading...
439
-
100%
Rates : 1