பாஜக பிரமுகரை அடித்து மருத்துவமனைக்கு அனுப்பிய சந்தானம்?

Loading...

தமிழ் சினிமாவின் காமெடியானாக கலக்கி தற்போது கதாநாயகனாகவும் ஜெயித்து வருபவர் நடிகர் சந்தானம்.

இவருக்கும் சண்முக சுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விவகாரத்தில் சந்தானம் தன்னைத் தாக்கியதாக, ஒருவர் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சந்தானம் தரப்பிருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சந்தானத்தால் தாக்கப்பட்ட பா.ஜ.க தென் சென்னை மாவட்டத் துணை தலைவர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சந்தானம் சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது

Loading...