உங்க முகம் ஜொலிக்க – எந்த மேக்கப்பும் தேவையில்ல

Loading...

பிபி க்ரீம் தான் இன்றைய யுவதிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நம் சருமத்தை பாதுகாத்திடும் ஓர் அரணாக இது செயல்படுகிறது. இது மல்டி பர்ப்பஸ் க்ரீமாகவும் இருக்கிறது.

ஜெர்மனைச் சேர்ந்த டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் கிறிஸ்டின் ஸ்க்ராமெக் (Christine Schrammek)என்பவரால் தான் பிபி க்ரீம் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலாக அறுவை சிகிச்சை செய்த தழும்புகளை மறையவைப்பதற்காக அந்த க்ரீம் பயன்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஆசியா மற்றும் கொரியாவைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள்,நடிகைகள் பயன்படுத்த ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்த துவங்கிவிட்டார்கள். பிபி க்ரீமை நீங்களும் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? அதனால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

எடைக்குறைவு
அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் ஃபவுண்டேசன் க்ரீமை விட பிபி க்ரீம் எடை குறைவானதாக இருக்கும். இதனை தினமும் நீங்கள் பயன்படுத்தலாம். தினமும் போடுவதால் சருமத்தில் ஏதேனும் பிரச்சனை வருமா என்று பயப்படத் தேவையில்லை.

சன்ஸ்கிரீன்
இப்போதெல்லாம் சந்தைகளைல் கிடைக்கும் பிபி க்ரீம்களில் சன்ஸ்க்ரீனும் சேர்ந்தே வருகிறது. இதனால் நீங்கள் தனியாக சன்ஸ்க்ரீன் போட வேண்டிய அவசியமில்லை

மாய்ஸ்சரைசர்
நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சரைசரை விட இது நன்றாக செயல்படும். உங்கள் சருமத்தை நன்றாக பாதுக்காக்கும். இதற்கு மேல் மற்ற க்ரீம்களோ அல்லது ஃபவுண்டேஷனோ போடத்தேவையில்லை.

பல ஷேட்கள்
பிபி க்ரீம் பல கலர் ஷேட்களில் கிடைக்கிறது. உங்கள் நிறத்திற்கு ஏற்ற க்ரீமை தேர்ந்தெடுத்து அதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

எல்லாருக்கும் பொருந்தும்
இதன் எடைக்குறைவாக இருப்பதால் எல்லா சருமத்தினருக்கும் ஏற்றதாக இருக்கும். எண்ணெய் பசையுள்ளவர்கள், வறண்ட சருமத்தினர் என யாரு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இயற்கை அழகு
ஃபவுண்டேஷன் போல இல்லாமல் பிபி க்ரீம்கள் உங்கள் சருமத்தோடு ஒன்றிவிடுவதால் பெரிதாக வித்யாசம் ஏதும் தெரியாமல் இயற்கை அழகுடன் காணப்படுவீர்கள்.

ப்ரைமர்
மேக் கப் போடும் போது ப்ரைமரை எடுத்துச் செல்ல மறந்து விட்டால் அதற்கு பதிலாக பிபி க்ரீம்பயன்படுத்தலாம். இது உங்கள் முகத்தில் நிறமாற்றங்கள் இருந்தால் சமன் செய்து ஒரே ஸ்கின் டோன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்.

எண்ணெய் சருமம்
பிபி க்ரீமில் இருக்கும் சில மினரல்ஸ் உங்கள் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிந்து கொள்ளும். இதனால் அதிக எண்ணெய் பசையின்றி இருக்க முடியும்.

ஸ்கின் லைட்னிங்
சில பிபி க்ரீம் வகைகள் உங்கள் முகத்தில் தோன்றும் நிறமாற்றங்களை சரி செய்திடும்.சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவிடும்.

எளிது
இது அதிக விலை இருக்காது என்பதால் எளிதாக வாங்கிடலாம். இதை எளிதாக நீங்கள் எடுத்துச் செல்லலாம். தனித்தனியாக சன் ஸ்க்ரீன், மாய்சரைசர் என்று பயன்படுத்தாது பிபி க்ரீம் மட்டுமே பயன்படுத்தலாம்.

ஈரப்பதம்
பிபி க்ரீம் எப்போதும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவிடும். இதற்கு முன்னதாகவோ அல்லது பிபி க்ரீம் போட்ட பிறகோ மற்ற மாய்சரை எதுவும் பயன்படுத்த தேவையில்லை. பிபி க்ரீமிலேயே அதற்கான பொருட்களும் இருக்கின்றன என்பதால் இதனை நீங்கள் பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

சுருக்கங்கள்
சந்தையில் கிடைக்கும் சில பிபி க்ரீம்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதிலும் வல்லது. நீங்கள் பிரத்யோகமாக முகச் சுருக்கங்களை போக்கவோ அல்லது வராமல் தடுக்கவோ எந்த க்ரீமும் பயன்படுத்த தேவையில்லை.

கருவிகள்
இதனை அப்ளை செய்வதற்கு தனியாக என்று எந்த கருவியையும் பயன்படுத்த தேவையில்லை உங்கள் கைவிரல்களாலேயே இதனை அப்ளை செய்துகொள்ளலாம். இதனை நீங்கள் எளிதாக பயன்படுத்த முடியும்.

Loading...
996
-
Rates : 0