தாடி பாலாஜி வீடு சண்டை காவல் நிலையம் வாசல் எட்டியுள்ளது.! நடந்தது இது தான்..!

Loading...

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி, நித்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். “ஜாதி பெயர் சொல்லி திட்டுகிறார், தினமும் குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்துகிறார்” என்று நித்தியா, தாடி பாலாஜி மீது போலீசில் புகார் அளித்தார். “என் மனைவிக்கும் மனோஜ்குமார் என்பவருக்கும் தொடர்பு இருக்கிறது. என் மனைவியை பயன்படுத்தி என்னை மனோஜ்குமார் மிரட்டி வருகிறார்” என்று தாடி பாலாஜியும் போலீசில் புகார் அளித்திருந்தார்.

தாடி பாலாஜி வீடு சண்டை காவல் நிலையம் வாசல் எட்டியுள்ளது.! நடந்தது இது தான்..!

இந்த நிலையில் இருவரையும் நேற்று வில்லிவாக்கம் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். இருவரும் நேற்று போலீஸ் ஸ்டேஷன் வந்திருந்தனர். இருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். இருவரும் தங்கள் தரப்பு புகார்களை விரிவாக கூறியுள்ளனர். இந்த விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது. இதில் மனோஜ்குமார் இன்று விசாரிக்கப்படுகிறார். “இந்த விசாரணைகளுக்கு பிறகு போலீசார் இருவருக்கும் சமாதானம் செய்து வைப்பதா அல்லது இருவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வதா என்பதை முடிவு செய்வார்கள்” என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Loading...
1484
-
Rates : 0