சாமி:2 படத்தில் இருந்து விலகினார் நடிகை திரிஷா..! – இது தான் காரணமாம்..!

Loading...

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி 2’ படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியுள்ளார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியுள்ளதாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சாமி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.

 

ஹரி இயக்கத்தில் விக்ரம், மற்றும் த்ரிஷா, விவேக் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் சாமி. இந்த படத்தில் விக்ரம் போலீஸாக நடித்திருந்தார். சாமி படம் வெற்றி பெற்றதை அடுத்து 2-ம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்திருந்தார்.

இதில் முதல் பாகத்தில் நடித்த விக்ரம், த்ரிஷா, ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென் த்ரிஷா விலகுவதாக அறிவித்துள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்க 

Loading...
486
-
Rates : 0