TRP வெறி..! – விஜய் டிவி-யின் அடுத்த நீயா? நானா? நிகழ்சியின் சர்ச்சை தலைப்பு..!

Loading...

விஜய் டிவியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஒரு தலைப்பை தேர்வு செய்துள்ளது. ஞாயிறு அன்று ஒளிபரப்பாக உள்ள நீயாநானா நிகழ்ச்சியில் யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

 

ஜிமிக்கி கம்மல் பாடல் சமீபத்தில் பிரபலமானது. இதில் நடனமாடிய கேரள பெண்கள் தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டனர். இதனை மனதில் வைத்துக்கொண்டு தமிழக பெண்களையும், கேரளா பெண்களையும் ஒப்பிட்டு நிகழ்ச்சி நடத்தி டிஆர்பியை ஏற்றிக்கொள்ள நினைக்கிறது விஜய் டிவி.

பெண்களை காட்சிப்பொருளாகவே, அழகுப்பொருளாகவே பார்க்கும் மனப்பான்மை எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Loading...
762
-
Rates : 0