நம்பி நான் ஏமாந்துவிட்டேன்! அம்மாவின் அழுகை! மனம் திறக்கும் பிக்பாஸ் சக்தி

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ட்ரிகர் என்ற பெயர் அடைமொழியை பெற்றவர் சக்தி. கேட்பார் பேச்சை கேட்டுக்கொண்டு தன் இயல்பான நிலையை காட்டவில்லை என கமெண்ட்டுக்கு ஆளானவர்.

ஓவியா விசயத்தில் தன்னிலை உணர்ந்து பொது மேடையில் மன்னிப்பு கேட்டு தன் குணத்தை மீட்டெடுத்தது பலரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. இந்நிலையில் சக்தி தன் மனம் திறந்த பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் கிடையாது. எந்த காட்சிகளை கோர்வையாக்கி காட்ட வேண்டும் என்பது மட்டுமே ஸ்கிரிப்ட். ஒருவரை நல்லவராகவும், கெட்டவராகவும் காட்டுவது பிக்பாஸின் வேலை.

நான் செய்த சிறு தவறுகளை எடுத்துக்காட்டினாங்களே தவிர, நல்ல விஷயங்கள அவர்கள் காட்டவேயில்லை. இதை நான் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை.

பிக்பாஸிலிருந்து வந்த பிறகு தான் எல்லாரையும் நம்பி ஏமாந்துவிட்டோம் என தெரிந்தது. இனி என்னை மட்டுமே நான் நம்புவேன். சமூக வலைதளங்களில் வந்த சில கமெண்ட்களால், கெட்ட பெயர்களால் என அம்மா அழுதார்கள் என அவர் கூறியுள்ளார்.

Loading...
670
-
Rates : 0