பிக்பாஸ் பிரபலத்திடம் கடும் கோபத்தை வெளிக்காட்டிய ஹன்சிகா

Loading...

ஹிந்தி பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் நடிகை ஹினாகான், தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகள் குண்டாக இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தென்னிந்திய இயக்குநர்கள் நடிகைகளை எடை அதிகரிக்கும்படி கூறுவது வழக்கம் என ஹினா கான் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகள் பற்றி பேசியது பலருக்கும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. மேலும் நடிகை ஹன்சிகா நீங்கள் சொல்வதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நீங்கள் தென்னிந்திய திரையுலகத்தை அவமதிக்கிறீர்களா? என்று ட்வீட் செய்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலத்திடம் கடும் கோபத்தை வெளிக்காட்டிய ஹன்சிகா...!

தென்னிந்தியப் படங்களில் பல பாலிவுட் நடிகர், நடிகைகளும் நடித்திருக்கிறார்கள், தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பாவம் ஹினாகானுக்கு தெரியவில்லை போலும் எனக் கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா. மேலும் ‘ஹினாகான் என்ன உளறினாலும், ஒரு தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகை என்பதில் நான் பெருமைப்படுவதாகவும், தொடர்ந்து கோபம் தணியாமல் பதிலடி கொடுத்த நடிகை ஹன்சிகா ஹினா கான் கூறியது முற்றிலும் புல்ஷிட் என கோபத்துடன் ட்வீட் செய்து வந்தார்.

Loading...
1207
-
Rates : 0