பிரபல நடிகருக்கு நேற்று எதிர்ப்பு.. இன்று வாழ்த்து…!! கடுப்பில் ரசிகர்கள்…!!

Loading...

நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ‘இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் கூற முடியாது’ என்ற கருத்து தெரிவித்திருந்தார். அந்நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்தார்.

நான் இந்து. ஆனால் தீவிரவாதி அல்ல. மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே அரசியலுக்கு வருவதற்கான வழி அல்ல. மக்கள் பணியில் ஈடுபட வேண்டும். அதை செய்யாமல் குறுக்கு வழியில் அரசியலுக்கு வர ஆசைப்படக்கூடாது. நீண்ட நாட்களுக்கு அது நிலைக்காது. ஊடகங்கள்தான் அனைத்தையும் பெரிதுபடுத்துகின்றன என பொரிந்து தள்ளினார்.


ஆனால், இன்று பிறந்த நாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள காயத்ரி “ மக்களுக்கு நன்மை செய்யும் சிறந்த அரசியல்வாதியாக நீங்கள் மாறுவீர்கள். என் தாய் மற்றும் சகோதரியின் குடும்பத்தினரும் உங்களை வாழ்த்துகிறார்கள். நிறைய அன்புகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி அவர் கருத்து தெரிவித்திருப்பதை பலர் டிவிட்டரில் சுட்டிக் காட்டி வருகின்றனர். ஆனால் “ உங்களுக்கு பிடித்த நபர் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒருவரின் கருத்திற்கு மறுப்பு தெரிவிப்பதால் அவரை வெறுக்கிறோம் எனக் கூற முடியாது. நான் அவரை நேசிக்கிறேன்’ என காயத்ரி பதிலடி கொடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#

Loading...
174
-
Rates : 0