தினம் இரவில் இதை சாப்பிடுங்கள்: எடை கண்டிப்பா குறையுமாம்!!

Loading...

உடல் எடைதான் பெரும்பாலோனோருக்கு முதல் எதிரியாக இருக்கும். உடல் எடை ஒருபக்கம். அதனால் வரும் அச்சுறுத்தல்கள் ஒருபக்கம் என்ரு பலரையும் மன உளைச்சலில்தான் கொண்டு போய் விடுகிறது.
நேரம் கிடைக்கவில்லை. உடற்ப்யிற்சி நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று வேலை, வீடு சோர்வு என வாழ்க்கை சுழன்று கொண்டேயிருக்கிறதா? நீங்கள் சாப்பிடும் உணவுகளில் சில ட்ரிக் மூலம் உங்கள் உடையை குறைக்கலாம்.

உடலிலுள்ள நச்சுக்களை அழிப்பதால் 4 கிலோ வரை உடல் எடை குறையும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அதோடு, கொழுப்பை கரைக்கும் உணவுகளையும் இரவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இரவுகளில்தான் நச்சுக்களை வெளியேற்றும் வேலையை உடல் உறுப்புகள் செய்கின்றது. அந்த ஸ்மாயத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய அருமையான குறிப்புகளை இந்த கட்டுரையில் காணலாம்.


ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் உடல் கொழுப்பை வேகமாக கரைக்கும். 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இது மிகச் சிறந்த சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. குடல்களில் தங்கும் கொழுப்பையும் நச்சுக்களையும் கரைத்து உடல் எடை வேகமக குறைக்க உதவுகிறது. அல்சர் அல்லது மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பெரில் இதனை எடுத்துக் கொள்ளவும். மற்றபடி யாரும் இதனை பயன்படுத்தி வெற்றி காணலாம்.

இரவில் தயிர் :

இரவுகளில் தயிர் அல்லது யோகார்ட் எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இவைகள் ஜீரணம் மண்டலத்தின் வேலையை தாமதமாக்கும். இதிலுள்ள லாக்டோஸ் மற்றும் கொழுப்புகளும் இருப்பதால் இவை உடல் எடையை இன்னும் அதிகமாக்கிவிடும். ஆகவே இரவுகளில் தயிருக்கு நோ சொல்லிடுங்கள்.


இரவுகளில் குளியல் :

இதுவும் அருமையான் ட்ரிக் தான். குளிர்ந்த அல்லது லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ந்துவிடும்போது உடல் மீண்டும் வெப்பத்தை பெற கலோரிகளை எரிக்கிறது. இதனால் உடல் எடை குறையும். சுடு நீரில் குளிக்க வேண்டாம்.

சைனிஸ் உணவுகள் :

இரவுகளில் பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற சைனிஸ் உணவுகளை எப்போதும் தவிருங்கள். அவைகளில் சோடியம் இருப்பதால் இதயத்திற்கு நல்லதல்ல. அதோடு வயிற்று உப்புசத்தை உண்டு பிண்ணிவிடும். இதுவே உடல் பருமனுக்கு காரணம்.

சுகர் ஃப்ரீ சூயிங்கம் :

சர்க்கரை இல்லாத சூயிங்கம் தானே என்று அவற்றை மென்னாதீர்கள். அதிலுள்ள “சார்பிடால்” உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மெட்டபாலிசத்தையும் தடுக்கும்.


கடலை பர்பி வகைகள் :

கடலை பர்பி, மற்றும் தானிய வகைகளில் செய்யப்படும் ஸ்நேக்ஸ்களை இரவுகளில் சாப்பிடுவதை தவிருங்கள். இவை வாயுவை உற்பத்தி பண்ணும். இதன் கார்ணமாக உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அவற்றை இரவுகளில் மட்டும் தவிருங்கள்.

ஸ்மூத்தி :

பாதாம் பால், தேங்காய் பால், கீரை, மற்றும் பழ வகைகளில் ஸ்மூத்தி செய்து குடித்தால் உடல் எடை குறையுமாம். இவற்றால் நீர்ச்சத்துக்கள் உடலில் அதிகமாகிறது. கொழுப்பு வெகமாக கரைகிறது. ஆனால் கடைகளில் வாங்கி குடிப்பதை தவிருங்கள். வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.

இரவுகள் சாப்பிட உகந்தவை :

டார்க் சாக்லேட், சிவப்பு நிற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை இரவுகளில் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். முக்கியமாக இரவில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலே நீங்கள் வித்தியாசத்தை காணலாம்.


தக்காளி சூப் :

இரவுகளில் தக்காளி சூப் குடிக்கலாம். இவை அற்புதமாக உடல் எடை குறைக்க உதவும். தக்காளி நச்சுக்களை நீக்கும், இதயத்தில் படியும் கொழுப்புக்களை கரைக்கும். இரவுகளில் தூங்குவதற்கு முன் தக்காளி சூப் குடித்துவிட்டு படுக்கலாம். அல்சர் இருப்பவர்கள் தக்காளியை தவிர்க்கலாம்.

பப்பாளி :

பப்பாளி தினமும் சில துண்டுகள் சாப்பிட்டு படுங்கள். இவை வயிற்றிலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை பெற்றவை. பப்பாளியை தொடர்ந்து இரவில் சாப்பிட்டுப் பாருங்கள். நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

அன்னாசி :

அன்னாசி வேகமாக உணவுகளை ஜீரணிக்க்சச் செய்யும். ஜீரண மண்டலம் நச்சுக்களை வெளியேற்ற துணைபுரிகிறது. அன்னாசி ஜூஸ் செய்து தினமும் குடிக்கலாம். இவை கணிசமாக உடல் எடையை குறைக்கும்.


கவனிக்க வேண்டியவை :

எல்லாவற்றையும் விட முதலில் சீக்கிரம் இரவு உணவை நீங்கல் முடிப்பது முக்கியம். லேட்டாக டின்னர் எடுத்துக் கொண்டால் எப்போதும் உடல் எடை குறையாது. மாறாக அதிகரிக்கும். எதையும் ஆரம்பத்தில் ஜோராக செய்வது,. பின் அப்படியே கிடப்பில் போடுவது. இந்த பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். பாட பாட ராகம் என்பது போல் ஒரு விஷயத்தை செய்தேயாக வேண்டும் என்று சேலஞ்ச் எடுத்துக் கொண்டு மேலே சொன்னவற்றை மிகச் சிலவாவது முயன்று பாருங்கள். உண்மையில் நீங்களே ஆச்சரியப்படும்படி உடல் எடை குறையும்.

Loading...
2243
-
100%
Rates : 4