All videos of Tamil Beauty Tips

 • நடிகை ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஜோ சிவக்குமார் குடும்பத்தின் ஆண்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். நான் நடிப்பதற்கு சப்போர்ட் செய்தார்கள். இந்த படத்தில் நடித்தது மிகவும் பிடித்திருந்தது. வீட்டிலிருந்து நான் கிளம்புப் போது சூர்யா வெளியே கார் வரைக்கும் வந்து டாட்டா சொல்லி அனுப்பிவைப்பார். அதே போல என் அப்பாவும் வாழ்த்திக்கொண்டே இருப்பார். சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகு நான் சூர்யாவுக்கு ஒரே ஒருமுறை தான்...

 • சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனை அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக சாடினார்கள். அனைவரது கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்நிகழ்ச்சி குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது: “காலை வணக்கம். ஒவ்வொரு முறை சர்ச்சை வரும்போதும், விமர்சனங்களை எதிர்கொள்ள நான் சற்று அவகாசம் எடுத்துக் கொள்வேன். ஏனென்றால் அந்த...

 • குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், தொல்லை தீர எளிய பரிகாரம் உள்ளது. இதனை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரம் குடும்பத்தில் அமைதியே இல்லை, எதற்கெடுத்தாலும் பிரச்சனை. இந்த நிலை மாற எளிய பயனுள்ள ஒரு பரிகாரம் உள்ளது. குடும்ப தோஷம் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும். இதுக்கு ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை,விரலி மஞ்சள், ஒரு ரூபாய் காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க...

 •  

 •  

 • வெளியில் போவதற்குமுன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக இதோ, இந்தக் குளியல் பவுடரை பயன்படுத்தினால் சருமம் மிளிரும். பயத்தம் பருப்பு – 100 கிராம் கடலைப்பருப்பு – 100...

 • கண்களைக் கவரும் பெண்களுக்கு அழகு நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா…எவ்வளவு நீளமான கூந்தல்….’ என்று மூக்கின் மீது விரலை வைப்பார்கள். அதேபோல், உங்களுக்கும் நீண்ட கூந்தல் வளர வேண்டும் என்று ஆசையா? கவலையை விடுங்கள். உங்கள் தலைமுடி வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சத்தான உணவுகள். அவை என்னென்ன என்று பார்ப்போமா… முட்டை: தலைமுடி வளர்வதற்கு புரதச்சத்து அவசியம். அதற்கு முட்டை மிகச்சிறந்த உணவு. முட்டையை அவித்தோ, அல்லது ஆம்லேட், ஆப்பாயில் போன்றவை தயாரித்தோ...

 •   நல்ல உணவு, அமைதியான மனம், மலர்ந்த முகம் இந்த மூன்றுமே உலகின் தலைசிறந்த டாக்டர்கள். மூன்றும் நன்றாக இருந்தால் தோற்றத்தில் அழகு துள்ளும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்: * பசுமையான மரம் செடி கொடிகளை அடிக்கடி பார்ப்பது, கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கும் மகிழ்ச்சி. * கன்னம் ஒட்டிப் போய் இருக்கிறதா? தினமும் வாயில் தண்­ணீர் ஊற்றி கன்னத்தின் உட்பகுதி விரியுமளவுக்கு நன்றாக கொப்பளியுங்கள். * ஆடை அணிவது...

 • 1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. 2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. 3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். 4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். 5....

 • ஆடைகள் நம்முடைய அழகை அதிகமாக்கிக் காட்டுகின்றன. அதே நேரத்தில் ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்களை அணிந்து கொண்டால் அழகு மேலும் கூடுகிறது. பெண்கள் தாங்கள் அணிந்தி ருக்கும் உடைகளின் கலருக்கும், ஸ்டைலுக்கும் பொருத்தமான அணிகலன்களைத் தேர்வு செய்து, அணியும்போது பார்ப்பவர்கள் மூக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுவர். எனவே உடைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் அணிகலன்களை தேர்வு செய்வதில் கவனம் எடுத்துகொள்ள வேண்டும். அணிகலன்கள் என்றாலே ஒருவிதமான சந்தோஷத்தையும், அழகின்மேல் ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன. நகைகளை மட்டும் அணிகலன்கள் என கருத கூடாது....

 • கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க கோடையில் சில சமயங்களில் வீட்டில் கூட இருக்க முடியாது. ஏனெனில் வீட்டிற்குள்ளேயே அனலானது அவ்வளவு அடிக்கும். மேலும் வீட்டில் இதுவரை நன்கு அடர்ந்த நிற பெயிண்டை அடித்திருப்போம். வீட்டில் அனல் நென்கு தெரிவதற்கு முக்கிய காரணம், அந்த அடர்ந்த நிற பெயிண்ட் என்றும் சொல்லலாம். ஆகவே தான், பலர் கோடையில் குளிர் பிரதேசங்களுக்கு பிக்னிக் சென்று விடுகின்றனர். ஆனால் அவ்வாறு கோடை வெயிலுக்கு பயந்து, குளிர்பிரதேசம் செல்வதற்கு பதிலாக, வீட்டை எப்படி...

 • சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட...

 • பார்ப்பவர்களை சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் மூடு, உடை, விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்த சிறந்த இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு முதல் பிரவுன் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்! லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும். · கிளாஸ்:- இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது. குறிப்பு:- லிப் பென்ஸிலால்...

 • இங்கே சுருக்கங்கள் என்பது வயதாவனதற்கான‌ அறிகுறிகளாக‌ கருதப்படுகிறது. இப்போதெல்லாம், சுருக்கங்கள் உங்களது 20 வயதில்  இருந்தே தொடங்குகிறது அதைக் கண்டு ஆச்சரியமாக கூடாது. தேவையில்லாத‌ மன அழுத்தம், தேவையான தூக்கம் இல்லாதது மற்றும் முறையற்ற உணவு முறையின் விளைவாக அடிக்கடி தோலானது சேதமாவதோடு சுருக்கங்களுக்கும் வழிவகுக்கும். நீங்கள் இதில் பாதிக்கப்பட்டால் இதிலிருந்து வெளியே வர சில வழிகளை தேடுவீர்கள். முதியவர்களால் கூட சில இயற்கை முறைகள் கொண்டு சுருக்கங்களை நீக்க முடியும். உங்கள் வயது ஏற ஏற‌,...

 • சீரான தூக்கம் ஞாபகசக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்குவகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரேசிலில் உள்ள Federal பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மனித மூளையில் பலமான மற்றும் பலவீனமான செயற்பாடுகளைக் கொண்ட பகுதிகள் காணப்படுவதாகவும், பலவீனமான பகுதிகளில் சிறந்த செயற்பாட்டினை வெளிக்காட்ட தூக்கம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூக்கத்தின்போது அநாவசியமாக மூளையில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் அழிக்கப்பட்டு ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர எலிகளின் தூக்க செயன்முறையும், மனித தூக்க...

 • கால் துர்நாற்றமானது மக்களின் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்து வருகின்றது. இதை குணப்படுத்த பல்வேறு வீட்டு வைத்தியம் உள்ளன. கால் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தால் பாக்டீரியா காரணமாக நாற்றம் ஏற்படுகின்றது. எனவே, இந்த பிரச்சனையை ஒழிக்க சிறந்த தீர்வுகள் வீட்டிலேயே உள்ளன. அதற்கு முதலில் காலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதை தவிர ஹார்மோர் பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவையும் தீர்க்கப்பட்டால் கால் துர்நாற்றத்திலிருந்து தப்பிக்க முடியும். ADVERTISEMENT பேக்கிங் சோடா கால் துர்நாற்றத்தை அகற்ற...

 • அதிக ஒப்பனை போட்டாலும், ஒப்பனை இல்லாதது மாதிரி இயற்கையாக தோற்றமளிக்க சில வ்ழிமுறைகள் உள்ளன. இதை பின் பற்றினாலே நீங்களும் அழகிதான். அதுவும் இரவு நேரங்களில் தேவதை  போல ஜொலிக்க சுலபமான சில டிப்ஸ். 1. முதல் படி தோலின் ஈரப்பதம் இயற்கையான ஒப்பனை போல் தோற்றமளிக்க ஒரு சூட்சும வழி உள்ளது, அதில் நம் சருமத்திற்கு ஏற்ற அதிக எண்ணெய் பசை இல்லாத மாய்ஸரைஸர் முதலில் பயன்படுத்த வேண்டும். இதனால் நம் தோல் வறட்சியாவது தடுக்கப்படும்....

 • நம் சருமத்தை பொலிவாக மட்டுமின்றி மிருதுவாகவும் வைப்பதற்காகவும் செய்யப்படுவதுதான் பேஷியல். சருமத்தை அழகாக்குவதில் ஒயின் வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன. மற்ற மதுபான பேஷியல்களை ஒப்பிடுக்கையில் வோட்கா பேஷியல் சற்று வித்தியாசமானது. இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர் மற்றும் எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் பத்திரமாக வையுங்கள். காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம்...

 • முதலில் இந்த வெடிப்புகளை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம். ரெகுலரான பெடிக்யூர் மிக அவசியம். பெடிக்யூர் ஆரம்பிக்கும் முன்பே எப்போதும் கால் நகங்களை ஷேப் செய்து விடுவது நல்லது. நம் ஊரில் பலரும் ஒட்ட வெட்டிவிடுவதுதான் வழி வழியாக செய்வது. ஆனால் காலில் நகங்கள் வளர்த்தால் அழகாக இருக்கும். காலில் நகங்கள் வளர்க்கும்போது எப்போதும் ஸ்கொயர் ஷேப்பையே கடைபிடித்தால் நன்றாக இருக்கும். என்னடா இது மெனிக்யூர், பெடிக்யூர்னு அலுத்துக்கிட்டால் இது அந்த காலத்திலிருந்து எல்லாரும் தினமுமே செஞ்சுட்டு...

 • ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளலாம். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்துகு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய...

 •   தேங்காய் எண்ணெயின் நன்மைகள் காலங்காலமாக தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் தேங்காய் எண்ணெயை, சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும். உண்மையிலேயே தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற மிகவும் சிறப்பான ஓர் அழகுப் பராமரிப்பு பொருள். இதற்கு காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான்.   தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும். இதில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும்...

 •   அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் கற்றாலையும் ஒன்று.. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல்  பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாலை மூலிகையாக பயன்படுகிறது கற்றாலையிலிருந்து  தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாலை.. கற்றாலையை தோல், உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாலையில் பாலிசாக்கரைடுகள், லெக்டின், மேன்னஸ் போன்ற கலவைகளை கொண்டுள்ளது. கற்றாலையில் முக்கிய உறுப்பாக தண்ணீர் உள்ளது. இது...

 • கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் – fruits during pregnancy கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிடுவார்கள். ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே. அதிலும் முதல் முறை கர்ப்பமானவர்களாக இருந்தால், எப்போதுமே அதிக கவனத்துடன் இருப்பார்கள். மேலும் இந்த நேரத்தில் பெரியர்வர்கள் என்ன சொன்னாலும், அதையே கேட்டு நடப்போம். குறிப்பாக கர்ப்பிணிகள்...

 •   வாக்சிங் என்பது அழகுக் கலையில் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு அவசிய சிகிச்சை. கை, கால்களில் என உடலின் வெளியே தெரிகிற பகுதிகளில் மட்டுமின்றி, அக்குள் போன்ற மறைவிடங்கள், முகம், தாடை என எந்த இடத்திலும் உள்ள அதிகப்படியான, தேவையற்ற ரோம வளர்ச்சியை இதன் மூலம் அகற்றிவிடலாம். தேவையில்லாத ரோமங்களை நீக்குவதில் எத்தனையோ வழிகள் இருந்தாலும் அவற்றில் மிகவும் பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததுமான முறை வாக்சிங். வாக்சிங் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...

 • புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும். புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். இப்போது புளியைக் கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பராமரிப்பது என்று பார்க்கலாம். * புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில்...

 • வெயிலின் தாக்கத்தால் முகம், கைக்கு அடுத்தபடியாக பாதிக்கப்படுவது கால்கள். அதுவும், போதிய பராமரிப்பு இல்லாவிட்டால் கால்களில் பித்தவெடிப்பு மற்றும் கருமை நிறத்தில் மாறிவிடும். அதற்கு, அழகு நிலையங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை, மாறாக வீட்டிலேயே சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். * எலுமிச்சையை துண்டுகளாக்கி, அதில் உப்பு தூவி, அந்த எலுமிச்சை துண்டை கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். * பாதங்களுக்கான ஸ்கரப் செய்வதற்கு, 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ்...