All videos in category கூந்தல் பராமரிப்பு (208 videos)

 •  

 • சமீப காலமாக உங்கள் தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? உங்கள் தலைமுடி பலவீனமாக இருப்பது போல் உள்ளதா? அப்படியெனில் உங்கள் தலைமுடிக்கு சற்று அதிகமாக பராமரிப்பு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். தலைமுடி பலவீனமானால், அது எலி வால் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இதனால் பல நேரங்களில் சங்கடத்தையும் உணர்வோம். தலைமுடி பலவீனமாவதற்கு ஊட்டச்சத்து குறைபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சில உடல்நல பிரச்சனைகளும் காரணங்களாகும். ஆனால் ஒருவர் முறையான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், நிச்சயம்...

 • ஒரு காலத்தில் வழுக்கை பற்றி கவலையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். தற்போது உலக அழகுக்கலை பற்றியும் அழகு சாதனப் பொருட்கள் பற்றியும், உடல் அழகை, முக அழகை, சிகை அலங்காரத்தை அருமையாக பேணிக் காப்பது எப்படி போன்ற சொல்லாடல்கள் பெருத்துவிட்டதால் வழுக்கை விழுதல் என்பது ஒரு கேலிக்குரியதாக மாறிவிட்டது. மனித வாழ்வில் காலப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல்தான் வழுக்கை விழுவதும். முடி இருந்தால் அழகு, வழுக்கை விழுந்தால் அழகற்றது என்பதற்கு சாராம்சமான பின்னணி ஏதுமில்லை....

 • நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தான் காரணம். ஒவ்வொரு மாதமும் அதிகப்படியாக ஒரு இன்ச் வரை முடி வளரும். ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது ஒவ்வொருவரின் பராமரிப்பைப் பொறுத்து தான் உள்ளது. ஆகவே தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் சில நாட்டு வைத்தியங்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப்...

 • நரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம். நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம். நீங்கள் கெமிக்கல் டை உபயோகிக்காத வரை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது...

 • 2 அடி கூந்தலை வைத்துக் கொண்டு எல்லாரும் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த காலத்தில் எளிதில் உபயோகிக்கும் ஷாம்பு கூட இல்லாமல் இயற்கை மூலிகைகளைக் கொண்டு எப்படி கூந்தலை பராமரித்தார்கள். நாம் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற வேண்டுமென கூந்தலின் தன்மையை கெடுத்துவிடுகிறோம். ஷாம்புக்களினாலும், கெமிக்கல் ஹேர் ஸ்ப்ரேக்களாலும் கூந்தல் வறட்சியை அடைந்து சிக்கலைகிறது. ஜீவனில்லாமல் ஏனோ தானோவென்றாகிவிடுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண் நீங்களே இயற்கையான முறையில் ஸ்ப்ரே வை தயாரிக்கலாம். இவை கூந்தலுக்கு...

 • தலை முடி உதிராமல் நன்கு வளர  1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது. 2. சிறிது சாதம்...

 • சீப்பு கொண்டு தலையை சீவும் போது கொத்தாக முடி வருகிறதா? அப்படியெனில் உங்கள் தலைமுடி ஆரோக்கியமின்றி உள்ளது என்று அர்த்தம். மேலும் உங்கள் தலைமுடிக்கு போதிய பராமரிப்பு கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையும் அது உணர்த்தும். தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் எத்தனையோ வழிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் அவற்றை பின்பற்றியும் இருப்பீர்கள். தலைமுடி உதிர்வதை சாதாரணமாக நினைத்துவிட்டால், பின் உங்கள் தலையில் உள்ள முடியின் அடர்த்தி குறைந்து, அதுவே உங்களது தோற்றத்தை மோசமாக...

 • முடி உதிர்தல் என்பது ஆண் பெண் இரு பாலாரையும் பாதிக்கக்கூடும். மிக முக்கியமாக மரபணுக்கள் காரணமாகினும், மேலும் பல காரணங்களும் இதற்கு உண்டு. ஹார்மோன் பேதம், தைராய்ட் சுரப்பி வேண்டிய அளவு சரிவர சுரக்காதது, ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் உச்சந்தலைக்கு சரிவர ரக்த ஓட்டம் இல்லாமல் போகுதல் போன்றவை. முடி உதிர்தல் என்பது அனைவருக்குமே ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகியுள்ளது. இதற்கு வெற்றிகரமாக தீர்வுக்கான சில வீட்டு குறிப்புகள், இதோ. நீங்கள் இயற்கையான பொருட்களைக் கொண்டு முடி உதிர்தலை ...

 • நுனி முடி பிளவுபட்டால் மாதத்திற்கு ஒரு முறை நுனி முடியை வெட்டிவிடுங்கள். ஈரமான முடியை சீப்பால் வாராதீர்கள். தலைக்கு எண்ணெய் தடவும் போது நுனிக்கும் எண்ணெய் தடவுங்கள். கன்டிஷனர்களைப் பயன்படுத்தினால், இதை தவிர்க்கலாம். அப்படி முடியாதவர்கள் கீழ்க்கண்ட வழியை பின்பற்றலாம். அடுக்கு செம்பருத்திப் பூ மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி இரண்டையும் தேங்காய் எண்ணெயில் போட்டு பாத்திர வாயை துணியால் மூடி 15 நாட்கள் வெய்யிலில் வைத்து விடுங்கள். பின்பு இதைத் தடவி வர நுனி முடி பிளவு...

 • கூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. அப்படி ஒன்றுதான் ஹேர் அயர்னிங். எளிதில் செய்துவிடலாம். ஒருதடவை ஹேர் அயர்னிங் செய்தால் அடுத்து வரும் நாட்களில் முடி அதிமாய் உதிரும். தலை அரிப்பு பொடுகுத் தொல்லை, அதிக வறட்சி ஆகியவைகள் உங்கள் கூந்தலில் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் நீங்கள் சரியான முறையில் ஹேர் அயர்னின் செய்யவில்லை என்று அர்த்தம். ஹேர்...

 • பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை கூந்தல் உதிர்வது. இந்த பிரச்சனையை சமாளிக்க கண்ட கண்ட ஷாம்புவை பயன்படுத்தால் வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம். ஒரு முட்டையுடன் அரை டீஸ்பூன் ஆலிவ் ஆயில், அரை மூடி எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் மைல்டு ஷாம்பு, சில துளிகள் எசன்ஷியல் ஆயில் சேர்த்து, நன்கு நுரைத்துவரும்படி எக் பீட்டரால் (egg beater) கலக்கவும். அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் ஹோம்மேட் எக் ஷாம்பு தயார். வழக்கமாக ஷாம்பு...

 • இயற்கையான முறையில் தலைமுடி நன்கு கருப்பாகவும், நீண்டும் வளர ஏற்ற அரிய மூலிகைகள் உள்ளன. இவை இளம் வயதில் ஏற்படும் இளநரையை போக்கி முடிக்கு நல்ல பொலிவை தருகிறது. 1. முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர: சதா மஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும். 2. முடி நன்றாக வளர: காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம். 3. செம்பட்டை முடி நிறம் மாற:...

 • முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும் * கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும். * நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். * சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. * செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய்...

 •   கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பட்டுப் போன்ற மென்மையுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்படாத பெண்களே இல்லை. விதவிதமாக ஹேர்ஸ்டைல் வைத்து அலங்கரிப்பது சிலருக்குப் பிடிக்கும் என்றால், கூந்தலை ஃப்ரீயாக விடுவதுதான் சிலருக்குப் பிடிக்கும். எந்த ஹேர்ஸ்டைலும் செய்யலாம்தான்.  ஆனால், அதற்கு முன் எப்படி தன் கூந்தலைப் பராமரிப்பது, ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, வெளியில் செல்லும்போது எப்படி கூந்தலைப் பாதுகாப்பது என்பதில் அக்கறை வேண்டும்.   மாசடைந்த காற்று, அதிக வெப்பம், புற ஊதாக் கதிர்வீச்சு போன்றவை கூந்தலில் நேரடியாகப்...

 • பெரும்பாலானோருக்கு தலை முடி அதிகம் உதிர்வதற்கு காரணம் பொடுகு தான். ஒருவருக்கு பொடுகு வந்துவிட்டால், அதனைப் போக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை வழிகளை முறையாகப் பின்பற்றி வந்தால், நிச்சயம் பொடுகைப் போக்கலாம். பொடுகு தொல்லையில் இருந்து விடுதலைத் தரும் பாட்டி வைத்தியங்கள்!!! முக்கியமாக இயற்கை வழிகளின் மூலம் பொடுகைப் போக்க முயற்சித்தால், பொடுகு நீங்குவதோடு, முடி மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியமும் மேம்படும். இங்கு பொடுகை மாயமாக மறைய வைக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன....

 • தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி? தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் வெங்காயம் பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் முக்கிய காரணம். இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வலிமையை அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு முடி அதிகமாக கொட்டினால், கண்ட எண்ணெயைப் பயன்படுத்தாமல் வெங்காயத்தைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக வெங்காயத்தைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வது நிற்பதோடு, முடியின் வளர்ச்சியையும் காணலாம்....

 • இப்போது மொழுமொழு மாம்பழம் தரும் வழுவழு அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாமா.. மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக் கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுது, வெண்ணெய் போல இருப்பதால் இதை ‘மேங்கோ பட்டர்’ என்று சொல்வார்கள். இது, தலை முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது. சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோ பட்டர் (அ) முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய்...

 • கூந்தல் பிரச்சனைகளில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு என்று தான். இதற்கெல்லாம் காரணம், மோசமான டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசடைந்து சுற்றுச்சூழல் போன்றவையே. கூந்தலுக்கு போதிய ஈரப்பசை வேண்டுமென்பதற்காக, நிறைய தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது, ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கையும் ட்ரை செய்ய வேண்டும். fruit hair masks lustrous hair வாழைப்பழம் மற்றும் தயிர்...

 • கோடையில் உங்களுக்கு அதிகமாக முடி உதிர்கிறதா? இதற்காக பலவற்றை முயற்சித்திருக்கிறீர்களா? இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தப்பாடில்லையா? கவலைப்படாதீர்கள், இங்கு முடி உதிர்தலைத் தடுக்கும் சிம்பிளான சில வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. கோடையில் அதிகமாக வெயில் அடிப்பதால், அதிக அளவில் வியர்த்து, மயிர்கால்கள் அதிகமாக ஈரப்பதத்துடன் இருப்பதால் தளர்ந்து, கொட்ட ஆரம்பிக்கிறது. மேலும் முடி உதிர்தலானது ஒருசில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். ஆகவே முடி உதிர்ந்தால், அதனை நிறுத்துவதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்கள், ஜெல்களை...

 • சிலருக்கு முடியின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல், கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஷாம்புக்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த முடியின் வெடிப்புக்களை ஒருசில வீட்டில் செய்யக்கூடிய ஹேர் மாஸ்க்குகளின் மூலம் தடுக்கலாம். * நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும்...

 • பெரும்பாலானோர் முடிகளின் வெளிப்பகுதியை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பார்கள். ஆனால் முடிகள் வளரும் இடமான முடியின் வேர்களான மயிர் கால்களைப் பராமரிப்பது தான் மிகவும் முக்கியம். முடியின் வேர்கள் ஸ்ட்ராங்காக இருந்தால் தான், முடிகளும் நன்கு அடர்த்தியாக வளரும். அதற்கு முடியின் வேர்களை நன்றாக மசாஜ் செய்து, இயற்கையான சில முறைகளில் அவற்றை நன்கு பராமரிப்பதன் மூலமே அழகான, அடர்த்தியான, நீளமான கூந்தலைப் பெற முடியும். அத்தகைய அழகான முடியை பெற சில...

 • ஆண், பெண் என இருபாலரும் வருத்தம் கொள்ளும் ஓர் விஷயம் தலைமுடி உதிர்வது. இப்படி தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஹெல்மட் அணிவது. தற்போது அனைத்து ஆண்களிடமும் பைக் உள்ளது. அதுமட்டுமின்றி, ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டுமென்ற சட்டமும் உள்ளது. ஹெல்மட்டை நீண்ட நேரம் அணிவதால் தலையில் வியர்வை அதிகரித்து, மயிர்கால்கள் வலிமையிழப்பதோடு, ஸ்கால்ப் ஆரோக்கியத்தை இழந்து, அதிகம் உதிர ஆரம்பிக்கும். எனவே முடி உதிர்வதைத் தடுக்க நாம் ஏதேனும் ஒரு...

 • சிலருக்கு முடியின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல், கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஷாம்புக்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த முடியின் வெடிப்புக்களை ஒருசில வீட்டில் செய்யக்கூடிய ஹேர் மாஸ்க்குகளின் மூலம் தடுக்கலாம். * நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும்...

 • மனிதனின் தலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவை ஒரு மாதத்துக்குள் ஒன்றேகால் சென்டி மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. எல்லா தலைமுடியும் ‘பாலிக்கில்ஸ்’ என்ற தனிப்பட்ட நுட்பமான பைகளில் இருந்துதான் வளர்கின்றன. இவை அனைத்துமே செல்கள்தான். இந்த ‘பாலிக்கில்ஸ்’ பை மேல் தோலில் இருந்து கீழ் தோலுக்கு துளைத்து இருக்கும். ஒரு மனிதனுக்கு இந்த பைகள் எத்தனை இருக்க வேண்டும், அதில் இருக்கும் முடிகளின் அடர்த்தி எத்தனை என்பதையெல்லாம் நம்மால்...