All videos in category கொழுப்பை கரைக்க (92 videos)

  •  

  • தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்! உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் 1 எலுமிச்சை பழம் 1 எலுமிச்சை காய் 1 புதினா இலைகள் 15 துருவிய இஞ்சி 2 மேஜைக்கரண்டி தண்ணீர் 1.5 லிட்டர் ஜூஸ் செய்யும் முறை: 1.வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதில் எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். 2. மீதமுள்ள எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி,...

  • துரித உணவுகள் மற்றும் வேலைப்பளு காரணமாக உடல் எடை அதிகரித்த பல்லவி, 18 மாதத்தில் 64 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். சண்டிகாரை சேர்ந்த பல்லவி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது பணி நிமித்தம் காரணமாக மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளார். தனது பணியின் காரணமாக இவரது வாழ்க்கை முறை மாற்றமடைந்துள்ளது. பணிக்கு செல்ல வேண்டுமென்பதால் துரித உணவுகளை சாப்பிடுவது, சரியான நேரத்திற்கு சாப்பிடமுடியாத காரணத்தினால் உடல் எடை அதிகரித்துள்ளார். மேலும், இவர் வேலை பார்த்த கம்பெனியில்...

  • அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்து காணப்படுகிறது. கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற தன்மைகளும் நிறைந்துள்ளது. கொய்யா இலையில் உள்ள பயன்கள் வயிற்றுப் போக்கினால் அவதிப்படுபவர்கள் 30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன்...

  • சர்க்கரையை ஒரு நாளைக்கு எவ்வளவு உபயோகிக்கிறீர்கள்? காபியிலோ, பாலிலோ சர்க்கரை போதுமானதாக இல்லை என்று நினைத்து திரும்பவும் போட்டுக் கொள்கிறீர்களா? அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்குதான். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை மிக குறைந்த அளவே உபயோகிக்க வேண்டும்.   ஆனால் நம்மையும் அறியாமல் நாளுக்கு நாள் அதன் அளவை அதிகரித்துவிடுகிறோம். அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதயும் மீறி அதற்கு அடிமையாகிவிடுகிறோம். இதனால் மெல்ல மெல்ல பின்விளைவுகள் வரும் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?  ...

  • கொலஸ்டிரால்’ என்ற வார்த்தையினை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த பெயரே ஒரு வித பயத்தினை அனைத்து மக்களிடையேயும் எழுப்பி உள்ளது. கொலஸ்டிரால் மனித குலத்தின் எதிரி போல் பார்க்கப்படுகின்றது. கொலஸ்டிரால் மனித குலத்தின் நண்பனும் கூடத்தான் என்பதனை நிறைய மக்கள் அறியவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது. உடலின் அநேக வேலைகளுக்கு கொலஸ்டிரால் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் ரத்தத்தில் அதன் அளவு அதிகமாகக் கூடும் பொழுது அது அமைதியான கொலையாளி ஆகிவிடுகின்றது. மாரடைப்பிற்கு முக்கிய காரணம்...

  • தினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா? உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா? அதைக் குறைக்க கண்ட டயட்டைப் பின்பற்றுகிறீர்களா? கவலையை விடுங்கள். தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!! காலை உணவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை உட்கொண்டு வந்தாலே அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம். மேலும் இந்த காலை உணவு மிகவும் சுவையாக விரும்பி சாப்பிடும் வகையில்...

  • வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில்...

  •   ! ரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க. * காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க * கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க. * கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள். * கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள். * கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும் * எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்...

  • உடல் மெலிய: 100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும். இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும். கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும். 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில்...

  • இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது என தாவரஇயல் வல்லுனர்களும், மருந்தியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளார்கள்.மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு...

  • உடல் பருமனால் வருத்தப்படுவோர் சங்கத்தைச் சேர்ந்தவரா நீங்கள்…? இதோ உங்களுக்கு ஓர் ஆரோக்கியமான தகவல்… குண்டான உடம்பின் எடையை மென்மேலும் குறைக்க வேண்டும் என விழைபவர்கள், தங்களது காலை உணவாக, இரண்டு முட்டைகளை மட்டுமே உட்கொள்வது நன்மை பயக்கும் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இதுதொடர்பான ஆய்வு, அமெரிக்காவிலுள்ள பென்னிங்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான நிகில் வி. துரந்தர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கலோரி குறைவான உணவுமுறையை பின்பற்றும் வகையில், காலை...

  • இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள் இதோ,   தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் உடம்பில் உள்ள சதைகள்குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும். அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும். சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில்...

  • இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குதவற்கு உடல் பருமனும் ஒருவித காரணமாகிவிட்டது.   ஆனால், அந்த உடல்பருமனை குறைப்பதற்கு போதிய வழிமுறைகளை பின்பற்றாமல்,சமையலறைக்கும், வீட்டின் அறைக்கும் நடந்துகொண்டிருப்போம். நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், இயற்கை நமக்கு அளித்துள்ள உணவு முறையை பின்பற்றினாலே போதும். வழிமுறைகள் சாதம், இட்லி, தோசை போன்ற உணவுகளை தவிர்த்து தினமும் ஐந்து கப்காய்கறி அல்லது பழம் சாப்பிடவேண்டும். கீரை, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக்...

  • உடல் பருமனை குறைக்க நாம் ஒருபக்கம் முயற்சி செய்தாலும் கூட, மறுபக்கம் தானாக அது ஏறத்தான் செய்கிறது. இதற்கு காரணம் நமது வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் வேலை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான். ஒருசிலருக்கு திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடினால் பிறகு குறையவே குறையாது. ash ஆனால், நடிகைகள் மட்டும் காலாகாலமாக எவ்வளவு வயதானலும் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அது எப்படி? அது ஒன்றும் பெரிய மாய வித்தை கிடையாது அவர்கள் கடைபிடிக்கும்...

  • இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள் போதுமானவை.   தவிர்க்க வேண்டியவைகள்: முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க. அதிகமாக...

  • குழந்தை கருவில் வளரும்போது, சுமார் ஆறு மாதத்துக்குப் பிறகு, குழந்தையின் உடலில் ‘கொழுப்பு செல்கள்’ உருவாக ஆரம்பிக்கிறது. அதன்பின், பருவம் அடையும் வயதில்தான், அதாவது ‘பாலின ஹார்மோன்கள்’ ( Sex Hormones) உடலில் சுரக்க ஆரம்பிக்கும் நேரத்தில்தான் மறுபடியும் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாகிறது. இந்த பாலின ஹார்மோனின் தூண்டுதலினால்தான், ஆண்-பெண் உடல் அமைப்புக்கு ஏற்ப உடலில் கொழுப்பு படிகிறது. சுமார் 15 வயதிற்கு மேல் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாவதில்லை. ஏற்கனவே உருவான செல்கள் அப்படியேதான்...

  • உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான். ஒரு அங்குலம் கூட நகராமல், காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்கிறோம். ஆனால், உணவு மட்டும் அதே அளவு கலோரிகள் குறையாமல் உட்கொள்கிறோம். இதனால் கலோரிகள் கரையாமல் உடலில் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. டயட்...

  • நன்கு பசித்தபின் உண்பர்வர்களுக்கு உண்ணும் உணவின் சத்து முழுவதுமாக உடலில் சேர்ந்து உடலில் பலம் நீண்ட நாள்கள் குறையாமல் இருக்கும். வாய் முதல் குடல் இறுதிப்பகுதியான ஆசனவாய் வரை சுத்தமாக இருப்பதற்கும் நல்ல ஜீர்ணசக்தியைப் பெறுவதற்கும் கீழ்க்காணும் மருந்தை முதலில் சிறிது காலம் சாப்பிடவும். கடுக்காய்த் தோல் – 9 கிராம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு இவை தலா 3 கிராம்.திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு சரக்குகளையும் ஒன்றாக இடித்தச் சூர்ணம் செய்து...

  •   பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ. * ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். * இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல...

  • பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகாவும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே . பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின்  மூலம்  அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் சில  பெண்கள் இதில் அக்கறை கொள்ளுவதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக அமையலாம். அதிலிருந்து தப்பிக்க நாம் உண்ணும் உணவு எளிமையானதாகவும், உடலுக்கு உடற் பயிர்ச்சி தேவையான போதுமானதாகவும் இருத்தல்...

  • சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா? எவ்வளவு டயட்டில் இருந்தாலும், நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். சரி இப்போது உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்களை பார்க்கலாம். * சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3...

  • கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள். ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்து வரலாம். தினமும் காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று...

  • நீங்கள் எடை இழக்க முயற்சி செய்கிறீர்கள் எனில், நீங்கள் பட்டினி கிடக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இங்கு பல்வேறுஆரோக்கியமான உணவுகள் நூற்றுக்கணக்கில் உள்ளன மேலும் இன்னும் சிலவற்றில் கூட எதிர்மறை கலோரி உள்ளது, எனவே இதை நீங்கள் முற்சி செய்வதால், உணவு மற்றும் உணவு செரித்தல் மேலும் உங்களுடைய கலோரிகள் எரிக்க என்று ஆகிறது. நீங்கள், தனியாக ஒரு உணவு வகையை கொண்டும், சாப்பிட்டும் உயிர்வாழ முடியாது, மேலும் நீங்கள் விரும்பியதை செய்யவும் முடியாது. எனவே...

  • உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள டயரைக் கரைத்து, பானை போன்றுள்ள தொப்பையைக் குறைக்க வேண்டுமா? அதிலும் முப்பதே நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? தொப்பையைக் குறைக்க எவ்வளவு கடுமையான பயிற்சியையும் மேற்கொள்ள தயாராக உள்ளீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பலரும் ட்ரெட்மில் மற்றும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்து வந்தால் தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் நிபுணர்களோ, உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்துமிக்க மற்றும் நல்ல சரிவிகித டயட்டை மேற்கொண்டு வர வேண்டும் என்று...