All videos in category தொப்பை குறைய (144 videos)

  • உங்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளதா? இதனால் உங்கள் உடலமைப்பே மாறிவிட்டதா? எந்த ஒரு உடையை அணிந்தாலும் அசிங்கமாக தொப்பை தொங்கி காணப்படுகிறதா? இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சித்தும் தொப்பை குறைந்தது போன்று தெரியவில்லையா? உங்கள் தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமானால், அதற்கு உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, கொழுப்புச் செல்களைக் கரைக்க உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களையும் பருக வேண்டும். இங்கு அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத...

  •  

  •  

  • உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகமாக சேர்ந்தால், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலும் கல்லீரலின் செயல்பாடு மிகவும் அவசியம். கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது உடல் எடை குறைவதில் தாமதமாக்கும். இதனால் தான் கல்லீரலை சுத்தம் செய்து உடல் எடையை குறைப்பதற்கான ஒரு பானம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்று பார்ப்போம். பானத்தில் உள்ள உட்பொருட்கள் உடலின்...

  •  

  • தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்! உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் 1 எலுமிச்சை பழம் 1 எலுமிச்சை காய் 1 புதினா இலைகள் 15 துருவிய இஞ்சி 2 மேஜைக்கரண்டி தண்ணீர் 1.5 லிட்டர் ஜூஸ் செய்யும் முறை: 1.வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதில் எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். 2. மீதமுள்ள எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி,...

  • பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி,...

  • அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்து காணப்படுகிறது. கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற தன்மைகளும் நிறைந்துள்ளது. கொய்யா இலையில் உள்ள பயன்கள் வயிற்றுப் போக்கினால் அவதிப்படுபவர்கள் 30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன்...

  •  

  • சர்க்கரையை ஒரு நாளைக்கு எவ்வளவு உபயோகிக்கிறீர்கள்? காபியிலோ, பாலிலோ சர்க்கரை போதுமானதாக இல்லை என்று நினைத்து திரும்பவும் போட்டுக் கொள்கிறீர்களா? அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்குதான். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை மிக குறைந்த அளவே உபயோகிக்க வேண்டும்.   ஆனால் நம்மையும் அறியாமல் நாளுக்கு நாள் அதன் அளவை அதிகரித்துவிடுகிறோம். அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதயும் மீறி அதற்கு அடிமையாகிவிடுகிறோம். இதனால் மெல்ல மெல்ல பின்விளைவுகள் வரும் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?  ...

  • நாம் குடிக்கும் தண்ணீருக்கு உடல் எடை அதிகரிப்புடன் போராடும் ஆற்றல் உள்ளதென ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. ஆய்வின்படி குடி தண்ணீர் மாப்பொருளை கொண்டிருப்பதில்லை, அத்துடன் இலிப்பிட்டு, புரதங்களையும் கொண்டிருப்பதில்லை. இவ்வகை மாப்பொருள், இலிப்பிட்டு, புரதங்களே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றது. ஆகையால் தண்ணீரை அருந்துவதன் மூலம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்து ஆரோக்கியமாக எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என சொல்லப்படுகிறது. மேற்படி ஆய்வில் அதிக BMI, எடையுள்ளவர்களில் நீரேற்ற அளவு குறைவாக இருந்தமை அவதானிக்கப்பட்டது....

  • கொலஸ்டிரால்’ என்ற வார்த்தையினை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த பெயரே ஒரு வித பயத்தினை அனைத்து மக்களிடையேயும் எழுப்பி உள்ளது. கொலஸ்டிரால் மனித குலத்தின் எதிரி போல் பார்க்கப்படுகின்றது. கொலஸ்டிரால் மனித குலத்தின் நண்பனும் கூடத்தான் என்பதனை நிறைய மக்கள் அறியவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது. உடலின் அநேக வேலைகளுக்கு கொலஸ்டிரால் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் ரத்தத்தில் அதன் அளவு அதிகமாகக் கூடும் பொழுது அது அமைதியான கொலையாளி ஆகிவிடுகின்றது. மாரடைப்பிற்கு முக்கிய காரணம்...

  • பொதுவாக சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி என்று பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் விக்ஸ். இந்த பொருள் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க மட்டுமின்றி, பலவாறும் பயன்படுகிறது. ஆனால் விக்ஸைக் கொண்டு தற்போது பலரும் கஷ்டப்பட்டு வரும் ஓர் பிரச்சனையான தொப்பையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? இதுவரை தொப்பையைக் குறைக்க எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் விக்ஸ் கொண்டு தொப்பையைக் குறைக்கும் முறை பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இங்கு அது...

  •  

  • தினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா? உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா? அதைக் குறைக்க கண்ட டயட்டைப் பின்பற்றுகிறீர்களா? கவலையை விடுங்கள். தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!! காலை உணவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை உட்கொண்டு வந்தாலே அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம். மேலும் இந்த காலை உணவு மிகவும் சுவையாக விரும்பி சாப்பிடும் வகையில்...

  • செய்யும் முறை : முதலில் விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்த பின் கைகளை பின்னே (முதுகு பக்கம்) மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொட வேண்டும். இப்படி இந்த நிலையில் 30 வினாடிகள் இருந்த பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழ வேண்டும். இப்படி தினமும் 5 முதல் 7 முறை செய்து...

  • வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில்...

  •   ! ரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க. * காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க * கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க. * கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள். * கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள். * கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும் * எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்...

  • உடல் மெலிய: 100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும். இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும். கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும். 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில்...

  • இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது என தாவரஇயல் வல்லுனர்களும், மருந்தியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளார்கள்.மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு...

  • உடல் பருமனால் வருத்தப்படுவோர் சங்கத்தைச் சேர்ந்தவரா நீங்கள்…? இதோ உங்களுக்கு ஓர் ஆரோக்கியமான தகவல்… குண்டான உடம்பின் எடையை மென்மேலும் குறைக்க வேண்டும் என விழைபவர்கள், தங்களது காலை உணவாக, இரண்டு முட்டைகளை மட்டுமே உட்கொள்வது நன்மை பயக்கும் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இதுதொடர்பான ஆய்வு, அமெரிக்காவிலுள்ள பென்னிங்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான நிகில் வி. துரந்தர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், கலோரி குறைவான உணவுமுறையை பின்பற்றும் வகையில், காலை...

  • இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குதவற்கு உடல் பருமனும் ஒருவித காரணமாகிவிட்டது.   ஆனால், அந்த உடல்பருமனை குறைப்பதற்கு போதிய வழிமுறைகளை பின்பற்றாமல்,சமையலறைக்கும், வீட்டின் அறைக்கும் நடந்துகொண்டிருப்போம். நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், இயற்கை நமக்கு அளித்துள்ள உணவு முறையை பின்பற்றினாலே போதும். வழிமுறைகள் சாதம், இட்லி, தோசை போன்ற உணவுகளை தவிர்த்து தினமும் ஐந்து கப்காய்கறி அல்லது பழம் சாப்பிடவேண்டும். கீரை, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக்...

  • உடல் பருமனை குறைக்க நாம் ஒருபக்கம் முயற்சி செய்தாலும் கூட, மறுபக்கம் தானாக அது ஏறத்தான் செய்கிறது. இதற்கு காரணம் நமது வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் வேலை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான். ஒருசிலருக்கு திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடினால் பிறகு குறையவே குறையாது. ash ஆனால், நடிகைகள் மட்டும் காலாகாலமாக எவ்வளவு வயதானலும் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அது எப்படி? அது ஒன்றும் பெரிய மாய வித்தை கிடையாது அவர்கள் கடைபிடிக்கும்...