All videos in category உலக நடப்பபுகள் (620 videos)

 •  

 • யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் நல்லூர் பகுதியில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். இத்தாக்குதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதல்தாரி, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல் பார் வழியாக...

 • யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனம் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால் நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் – பின் வீதியில் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன்போது நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து...

 • குழந்தைபிறந்த நேரத்தை வைத்து, ஜாதகத்தை எழுதுவார்கள். அதுவே சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா? அறுவைசிகிச்சைமூலம் குழந்தையை பிறக்க வைத்து விட்டு அவர்களின் எதிர்காலத்­திற்கான ஜாதகத்தை முன்னதாக கணிக்கின்றனர். இது சரியான பிறப்­பாக அமை­யாது. ஏனெனில் இயற்­கையின் நிய­தியை மீறி மனி­தனால் செய்­யப்­படும் எந்தவொரு செயல்பாடுகளுமே சரியானது அல்ல என்று ஜோதிட சாஸ்திரங்கள் மற்றும் புராணங்கள் கூறுகிறது. எனவே செயற்­கை­யாக நாம் தீர்­மா­னிக்­கும் ஒரு மனி­தனின் பிறப்­புக்கும் அதனை வைத்து செய்­யப்­ப­டு­ம் ஜாதகக்...

 • நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் பாம்புக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்கிறோம். எம்எல்ஏவாக இருந்தவர் திடீரென முதல்வராவதும், கம்பெனியில் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் திடீரென முதலாளியாவது ராகுவினால் தான். அன்பர்களே, இன்னும் சில நாட்களில் இராகு, கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. ஜோதிடப்படி உங்களது காலநிலை மாற உள்ளது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வரும் 27.07.2017 முதல் 13.02.2019 வரை…. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி 18.08.2017...

 •   இந்த ஹரியாலி தீஜ் பூஜையானது விரைவில் வாழ்க்கையில் வளங்களை சேர்க்கும் சக்தி வாய்ந்த பூஜையாகும். ஹரியாலி தீஜ் பூஜையானது இந்த வருடம் ஜூலை 26 ஆம் நாள் கிரிகோரியன் காலண்டர் படி கொண்டாடப்படுகிறது. நமது இந்து காலண்டர் படி பார்த்தால் ஆடி (ஷ்ரவண அல்லது சாவன்) மாதத்தில் அமாவாசைக்கு மூன்றாம் நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது வளர்பிறையின் தொடக்க நாட்களில் இவ்வாழ்க்கையில் அன்பும் மற்றும் வளங்களும் கிடைக்க வேண்டும் என வேண்டி கொண்டாடுகின்றனர். ஹரியாலி...

 • எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. சொர்ண கணபதி மந்திரத்தை உச்சரித்து, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் ஏற்படும். பொன், வெள்ளி, செம்பு மற்றும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட விநாயகர் உருவங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதை விடவும் எளிதான முறையில் பசும் சாணத்தை பயன்படுத்தி பிள்ளையார் செய்து, சாதாரண அருகம்புல் சாற்றியும் வழிபடலாம். அருகம்புல்லை மட்டும் பயன்படுத்தி அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு...

 •   வடிவம், நிறம், அளவு, தோற்றம், அழகு சார்ந்து ஒருவரின் குணாதிசயங்களை அறிந்துக் கொள்ள முடியும். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து இறகுகளில் ஒன்றை தேர்வு செய்வதை வைத்து, உங்களின் ரகசியங்களை தெரிந்துக் கொள்ள முடியும். இறகு – 1 இறகு ஒன்றை தேர்வு செய்யும் நபர்கள், இயல்பாகவே அமைதியானவர்கள். உங்களை சுற்றி இருக்கும் நபர்களுடன் உங்களை எளிதாக தொடர்பு செய்துக் கொள்வீர்கள். உங்களை காண்பதற்கு வலுவற்றவர் போல தெரிந்தாலும், நீங்கள் மிகவும் வலிமையானவர்...

 •   அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தனது திருடு போன சைக்கிளை, திருடனிடமிருந்து திருடியுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி மோர்டோன் ஹம்ப்ரேஸ்(30). இவர் அண்மையில் தனது சைக்கிள் திருடு போய்விட்டதாகவும், அதைப் பற்றி தகவல் அறிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட அவரின் நண்பர்கள், இதே போன்ற சைக்கிள் ஒன்று பேஸ்புக்கில் விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். அது தன்னுடைய சைக்கிள்...

 •   காசி கங்கை ஆறு என்றவுடன் புனித நீராடுதல் என்பதை தாண்டி அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் அகோரிகள். சிவனை தொழுது வரும் பிணங்களை உண்பது, கஞ்சா இழுப்பது, விபூதி பூசிய நிர்வாணமாக உடலுடன் அலைவது, மூர்க்கத்தனமானவர்கள், கடினமானவர்கள், கடவுளுக்கு இணையானவர்கள் என பலவாறு காணப்படுகிறார்கள். இவர்களிடம் இருக்கும் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அமானுட சக்தி என்ன? இவர் ஏன் இப்படி இருக்கிறார்கள்? என பலர் மத்தியிலும் பல சந்தேகங்கள், கேள்விகள் எழும். இதோ! அகோரிகள் பற்றிய...

 • பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுகிறார். அந்த வீட்டிலிருப்பவர்களால் நாமினேஷன் செய்யப்படுபவர்கள் எலிமினேஷன் சுற்றில் நிற்பார்கள். அவர்களில் யாருக்கு மக்கள் குறைவாக ஓட்டளிக்கிறார்களோ அவர் வெளியேற்றப்படுவார். இதன்படி அனுயாவும், கஞ்சா கருப்புவும் வெளியேறினர். ஸ்ரீ உடல்நலக்குறைவாலும், பரணி விரக்தியாலும் வெளியேறினர். தற்போது வையாபுரி, ஓவியா, ஆர்த்தி, ஜுலி எலிமினேஷன் சுற்றில் இருக்கின்றனர். இதில் ஓவியாவுக்கு தான் மக்கள் அதிக ஓட்டளித்துள்ளார்களாம். இதனால் அவர் தப்பித்து விட்டார். மற்ற மூவரில் யார் வெளியேற போகிறார்கள் என்பதை கமல்...

 • உறவில் ஏமாற்றுவது தவறு, பெருங்குற்றம் தண்டிக்க வேண்டியது தான். ஆனால், அந்த தண்டனையை நீதிமன்றம் கொடுக்க வேண்டும். அவர் ஏமாற்றுகிறார் என்றால் அவரை விட்டு பிரிந்து வந்து விடுவதே சரியான முடிவு. முதலில் அவருக்கு அறிவுரை சொல்லிப் பார்க்கலாம். இல்லையேல் விவாகரத்து பெற்றுவிடலாம். ஆனால், இங்கே ஒரு கணவன், மனைவி தன்னை ஏமாற்றிய காரணத்திற்காக மிளகாய்களை அவரது பெண்ணுறுப்பில் சொருகி சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளார். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வஞ்சகம்! தாய்ப்பால் தரும்...

 • சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் ஸ்வாமி ஓம், டெல்லி ஜந்தர் மந்தரில் பெண்களினால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது இரண்டு நாட்களுக்கு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமர்நாத்தில் யாத்ரீகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் உயிரிழந்த யாத்ரீகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது....

 • பாகிஸ்தானில் காதலருடன் ஓடிப்போன தங்கையை விருந்து தருவதாக அழைத்து வந்து உடன் பிறந்த அண்ணனே குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக கவுர கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. காதல் திருமணம் செய்யும் பெண்களை பெற்றோரும் உடன்பிறந்த சகோதரர்களும் கொலை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காதலருடன் சென்ற தங்கையை...

 • உலகில் நாள்தோறும் ஏதோ ஒரு மூலையில் எண்ணற்ற அதிசயங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதனை பலரும் அறிவதில்லை. அவ்வாறு விநாயகர் கோவில் ஒன்றில் இருக்கும் விநாயகர் சிலை 6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு என்று மாறி மாறி காட்சியளிக்கின்றது. தக்கலை அருகே கேரளபுரம் என்ற ஊர் உள்ளது. அங்கு தான் அந்த அதிசய விநாயகர் அவதரித்துள்ளார். அவருக்காக அழகிய ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அதிசயத்தைப் பற்றியும், அதன் மகிமைகளைப் பற்றியும்...

 • மகளின் காதலனுடன் ஓடிய தாயொருவர் தலைமறைவாகியுள்ள சம்பவமொன்று அம்பலாந் தோட்டை பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாகியுள்ள பெண்ணின் மகள் பிரத்தியேக வகுப்பில் தனது வயதை ஒத்த ஆணொருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இதனை அவர் வீட்டிலும் தெரிவித்துள்ளார். மகளின் காதல் விவகாரத்திற்கு பெற்றோர் எவ்வித எதிர்ப்புகளும் தெரிவிக்கவில்லை இதே வேளை யுவதியின் தாயுடனும் குறித்த இளைஞன் கள்ள உறவை பேணி வந்துள்ளான். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று யுவதி பிரத்தியேக வகுப்பு நிறைவடைந்த பின் தனது காதலன் வரும் வரை...

 • தங்களின் திருமண நிகழ்வுக்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு 100 ஹெல்மெட் மற்றும் 1000 மரக்கன்றுகளை பரிசாக வழங்கிய சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.வடக்கு கர்நாடகாவின் பிதார் பகுதியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்திவரும் சிவ்ராஜ் (27) என்பவருக்கும் சவிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தங்கள் திருமணத்துக்கு வருகை தந்தவர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை தந்து அசத்தியுள்ளனர். திருமணங்கள் பெரும்பாலும் ஆடம்பரமாக தான் நடத்தப்படுகின்றன. மது, இசை நிகழ்ச்சி என செலவு செய்கின்றனர். அதனால் நான் ஏதாவது...

 • யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணையில், 13 வயதான சிறுவன் ஒருவன் சாட்சியமளித்துள்ளான். வித்தியா படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கொலையுண்ட இடத்தில் முனகல் சத்தம்...

 • சென்னை அருகே திருமணத்திற்கு தயாராக இருந்த மணமகன் திடீரென மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. சென்னைக்கு அடுத்துள்ள கொளத்தூரில் உள்ள பூம்புகார் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவியின் பெயர் சாந்தி மற்றும் மகன் பெயர் ராஜேஷ்குமார் . இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார் அவரது பெயர் ஸ்ரீலேகா . இவரது மகன் ராஜேஷ்குமார் முகப்பேரில் கிளினிக் நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது தந்தையும் கிளினிக்கை பார்த்துகொள்கிறார்.. தனது ஒரே ஆசை மகனுக்கு...

 • “6ஆம் எதிரி சிவ­தே­வன் துஷாந்­தின் தலை­மை­யி­லேயே மாணவி வித்­தியா கடத்­தப்­பட்டு கூட்டு வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு, படு­கொலை செய்­யப்­பட்­டார். துஷாந்த் திரு­ம­ணம் முடிப்­ப­தா­கக் கூறி வித்­தி­யா­வைக் கடத்­திச் சென்று பாழ­டைந்த வீட்­டுக்­குள் வைத்து நண்­பர்­க­ளு­டன் கூட்டு வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தி­விட்டு வித்தியாவை கூட்­டா­கவே கொலை செய்­த­னர். அவர்­க­ளின் திட்­டத்­தின் பின்­ன­ணி­யில் சுவிஸ் குமா­ரும் இருந்­துள்­ளார்” இவ்­வாறு தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் 2 முக்­கிய சாட்­சி­கள் நேற்றுச் சாட்­சி­ய­ம­ளித்­த­னர். மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர்...

 • மட்டக்களப்பில் நடந்த நம்பமுடியாத அதிசயம்……. பாம்பாக மாறிய மனிதன்…. பார்த்த பின் மற்றவர்களும் அதிசயத்ததை அவதானிக்க முடிந்தது.

 • ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளுக்கும் காதல் பலன் எப்படி இருக்கும் என்பதை குறித்து காணலாம். மேஷம் மேஷம் ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வார்கள். ஆனால் எதிலும் திருப்தி அடையாதவராக இருப்பார்கள். இவர்களுக்கு காதலிக்கும் குணம் இருந்தாலும் அவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடியாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் காதல் உண்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். மிதுனம் மிதுன ராசிக்காரர்கள்...

 • மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் போது மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது என்கிறார். இருந்தாலும் ஒவ்வோரு நாட்டிலும் மரணத்திற்கு...

 • வித்தியாவை கடத்த 20 ஆயிரம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் , அதற்கு பின்னர் நடந்தவைகளை திறந்த மன்றில் கூறினால் தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஐந்தாவது சாட்சியான அரச சாட்சியான உதய சூரியன் சுரேஷ் கரன் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள், இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்...

 • அண்மையில் பண்டாரவளை பிரதேசத்தில் பாதசாரிகள் கடந்து செல்லும் மஞ்சல் கடவையில் தனது வாகனத்தை நிறுத்திவைத்திருந்த ஊவா மாகாண சபை அமைச்சர் ஒருவரிற்கு துணிச்சலான பொலிஸ் அதிகாரி ஒருவரால் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை நிறுத்திவைத்திருந்த குற்றத்திற்காக குற்ற பத்திரம் வளங்கப்பட்டிருந்தது. இதனை அருகில் இருந்து அவதானித்த சமூக நலன் விரும்பிகள் அவரை வெகுவாக பாராட்டியதோடு சமூக வலைத்தளங்களிலும் அது தொடர்பான பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.