All videos of Tamil Beauty Tips - page 143

 • அதுவும் முக்கியமாக பெண்களுக்கு. இப்படி ஒரு இடத்தில் இருந்து கொழுப்பை நீக்க வேண்டும் என்பதால், கைகளை வலுவடைய செய்வது சில நேரம் கடினமாக போய்விடும். ஆனால் கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். சரி, கைகளின் எடையை குறைக்க கீழ்கூறிய சில வகை உடற்பயிற்சியை செய்து பாருங்கள். நெஞ்சை பந்தின் மேல் அமுக்குதல் இந்த உடற்பயிற்சியில் ஈடுபட்டால் ட்ரைசெப்ஸ், தோள்பட்டைகள், நெஞ்சு, மைய தசைகள்...

 • முதலில் விரிப்பின் மேல் காலை லேசாக அகட்டி (1 அடி இடைவெளி விட்டு) நிற்கவும். வலது கையை மடக்கி வலது தொடையின் மீது வைக்கவும். பின்னர் மெதுவான இடது கையை நீட்டியவாறு வலது பக்கம் உங்களால் முடிந்த அளவு வளைய வேண்டும்.  இவ்வாறு வளைக்கும் போது இரண்டு கால் முட்டிகளும் மடங்க கூடாது. இதே போல் இடது புறம் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 15 முறை செய்யலாம். நன்கு பழகிய பின்னர் 25...

 • 40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகளான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் எட்டி பார்க்க தொடங்கி விடும்.  40 வயதில் எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ அதை பொறுத்துதான் அமையும். 40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதின் தொடக்கத்திலேயே நடைபயிற்சி போன்ற...

 •   சிலருக்கு பக்கவாட்டில் அதிகளவில் சதை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலில் விரிப்பில் இரண்டு கால்களையும் அகட்டி, (சிறிது இடைவெளி விட்டு) நிற்கவும். ஒரு பந்தை எடுத்துக் கொள்ளவும். கைகளால் பந்தை பிடித்து கொண்டு மார்பு பகுதியின் நடுவில் வைத்துக் கொள்ளவும். வலது புற இடுப்புப் பகுதி வரை பந்தைக் கொண்டு வந்து மெதுவாக குனிந்து வலது காலைத் தொட வேண்டும். இதே போல் இடது புறமும்...

 • முடி வளர சித்த மருத்துவம்..! வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின்...

 • காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்! சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ….. பித்தவெடிப்பு மறைய காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தொண்டை வலிக்கு பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும். இருமல்...

 •   *தேங்காய் பால் – 1/2 கப் எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும். *பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும். * 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்....

 •   இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும். நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது. சியாடிக்கா என்றால் என்ன? நமது உடலில் இரண்டு...

 •   நமது உடலிற்கு குறிப்பிட்ட அளவு கலோரிகளும், ஊட்டச்சத்துகளும் தேவைப்படுகிறது. அவற்றை நாம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொள்ளும் போது, நமது உடல் பருமனையோ அல்லது எடை இழப்பையோ சந்திக்கிறது. உடல் எடையை இழக்கவோ அல்லது எடையை அதிகரிக்கவோ, இறுதியான தீர்வு டயட் முறையே என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். நமது உடலில் கொழுப்பு சேர்வதிலும், வளர்ச்சிதை மாற்றத்திலும், நமது உடலின் எடையை கட்டுப்படுத்துவதிலும் நமது வாழ்க்கை முறை தேர்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகவே...

 •   எப்படி உடம்பைக் குறைக்கலாம்?  இதோ அதற்கான வழிமுறைகள்: 1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும். 2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும். 3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது...

 • தற்காலத்தில் உடல் உழைப்புக் குறைந்து, மூளைச்சார்ந்த உழைப்பே அதிகரித்துள்ளது. இதுவே உடல் பருக்க மிகப்பெரிய காரணமாக உள்ளது. ஆம். குழந்தைகள் முதல் பெரியவர்கள், ஆண்டுகள் முதல் பெண்கள் வரை அனைவருமே இக்காலத்தில் ஒரு அவசரகதியில், தங்களுடைய வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.காரணம், பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகள் தான். அலுவலகங்களில் எட்டுமணி நேரமும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்தல், வீட்டில் உள்ள பெண்மணிகள் வீட்டு வேலையை செய்து முடித்து, குடும்ப நபர்களை பள்ளிக்கு, அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதமுள்ள...

 •   உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி...

 • நெயில் ஆர்ட்’ என்பது நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது அனைத்து வயது பெண்களிடமும் அதீத வரவேற்பை பெற்றுள்ளது. நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் அந்த நகத்தையும் அழகாக வளர்த்து, சுத்தப்படுத்தி, பிறரை கவரும் விதத்தில் பல்வேறு வகையான அலங்காரங்களை செய்துகொள்வது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. அனைத்து வயது பெண்கள் மத்தியிலும் சக்கைப்போடு போடும் நெயில் ஆர்ட்டை குறைந்த செலவில் வீட்டிலேயே செய்துகொள்ள இதோ சில எளிய டிப்ஸ்… நகங்களை...

 • உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்று தான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கும். அதனால் தான் கண்களுக்கான மேக்-அப் எப்போதும் புகழோடு திகழ்கிறது. அதன் மதிப்பையும் இழக்காமல் இருக்கிறது. புகழ் பெற்ற சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதரான கல்லூரி மாணவி வரை தங்களின் கண்களை அழகாக வெளிக்காட்டவே ஆசைப்படுகின்றனர். அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும்...

 • எலுமிச்சை மற்றும் பேக்கிங் பவுடர் கழுத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்ய எலுமிச்சை மற்றும் பேக்கிங் பவுடர் ஓர் நல்ல காம்பினேசன். எலுமிச்சை ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக பயனளிப்பதால், உங்களது கழுத்து பகுதி நன்கு பொலிவடையும் மற்றும் பேக்கிங் பவுடர் உங்களது கழுத்து பகுதி சருமத்தை சுருக்கம் அடையாமல் இறுக்கமாக வைக்கவும் உதவுகிறது. தக்காளி மற்றும் எலுமிச்சை மாஸ்க் தக்காளி இங்கு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக இருந்து உங்களது கழுத்தில் ஏற்படும் கருப்புக் கோடுகளை அகற்றி வெண்மையடைய உதவுகிறது. தக்காளி ஜூஸை...

 • சிறந்த கிளின்சர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். மேலும் ரோஸ் வாட்டரைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் முகத்தை சுத்தப்படுத்தலாம். டோனர் ரோஸ் வாட்டரில் சிறிது சூடத்தைப் போட்டு, அதனைக் கொண்டு நாள் முழுவதும் பலமுறை சருமத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை...

 •   வரட்டு சருமம் உள்ளவர்கள் தினமும் குளிக்கச் செல்லுமுன் சிறிது தயிரை உடம்பில் தடவி தொடர்ந்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வந்தால் வரட்டு சருமம் சரியாகிவிடு‌ம். குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் தேய்த்து வென்னீரில் குளித்தால் வரட்டு சருமம் சரியாகி விடும். குளிருக்கும் இதமாக இருக்கும். எண்ணெய் நாற்றமும் அடிக்காது. வர‌ண்ட சரும‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ரி‌ல் ‌கு‌ளி‌க்க‌க் கூடாது.

 • ஒரு தேக்கரண்டி வெள்ளிக்காய் விழுது, ஒரு தேக்கரண்டி கடலை மாவில் தயிர், சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் இறுக்கம் குறைந்து இலகுவாகி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். • நன்குக் காய்ச்சியப் பாலில் இருந்து எடுக்கப்பட்ட பாலாடையை இரவு தூங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு மாஸ்க் போல முகத்தில் உபயோகப்படுத்தி பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பிரகாசிக்கும். • தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முல்தானி மெட்டியை...

 • பொதுவாக பெண்கள் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள பல்வேறு வகையான மேக்கப்களை செய்து கொள்வர். இதற்காக பல கிரீம்களையும், வெவ்வேறு விதமான பவுடர்களையும் அவர்கள் நாடுவதுண்டு. ஆனால் முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கை, கால்கள் பராமரிப்பதில் பெரும்பாலானோர் காண்பிப்பதில்லை. இதனால் கை, கால்கள் கருப்பாகிவிடும். எனவே நம் கை, கால்களை பராமரிக்க சில எளிய முறைகளை பின்பற்றினாலே போதுமானது. அழகான நகங்கள் வேணுமா? நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால்,...

 • பொதுவாக வேலைக்குபோகும் பெண்கள் வீடு திரும்பும்பொழுது கலைந்த தலைமுடியுடனும், எண்ணெய் வழியும் முகத்துடன் வருவதை பார்க்கிறோம். சில எளிதான அழகு சாதனப்பெருட்களை உபயோகிக்கும் பொழுது அவை காலை முதல் மாலை வரை நம் தோற்றத்தை பொலிவுடன் வைத்துகொள்ள உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். ஃபௌண்டேஷன் பௌடர் மற்றும் க்ரீம் : * நம்தோல் நிறத்தை விட லைட் கலரில் இருக்கும் ஃபௌண்டேஷன் க்ரீம் அல்லது பௌடரை உபயோகிப்பது சிறந்தது. * முகத்தை நன்கு கழுவி நன்றாக காய்ந்த...

 • மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். * இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்....

 •   உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான...

 • ஃப்ரன்ட் அண்ட் சைடு நீ அப்ஸ் பயிற்சி தினமும் கால்களை வலுவுடன் வைத்திருக்க சில எளிய பயிற்சிகளைச் செய்யலாம். இந்தப் பயிற்சிகள் செய்வதற்கு முன்பு ‘வார்ம் அப்’ செய்துவிட்டு தொடங்கினால், ‘கால்’ மேல் பலன் கிடைக்கும். உடல் எடை அதிகரிக்கும் போது கால் வலி வருகிறது. அப்படிப்பட்டவர்கள் கீழே உள்ள இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் சுவரில் அருகே நேராக நிற்கவும். வலது கால்...

 •   இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம்...

 • அணிகிற உடைக்கு பொருத்தமாக விழிகளின் நிறத்தையும் மாற்றிக் கொள்ள, கான்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கிற பழக்கத்தையும் தற்போதுள்ள பெண்களிடம் பார்க்க முடிகிறது. அழகுக்காக அணிகிற கான்டாக்ட் லென்ஸ் பாதுகாப்பானது தானா? அது பார்வையில் பிரச்சனைகளை ஏற்படுத்தாதா? அதைப் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?  என்பதை பார்க்கலாம். இப்போது பெண்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிவதில் அதிக விருப்பம் காட்டுகின்றனர். ஏதோ வருடத்தில் ஒருநாள், இரண்டு நாள் உபயோகிப்பதென்றால் பரவாயில்லை. கான்டாக்ட் லென்ஸ் போட்டால் பார்வை கெட்டுப்போகும்...

 •   ஆவணி பொறக்கட்டும்’ என்று காத்திருக்கும் கல்யாணப் பெண்களுக்கு ஒரு நற்செய்தி, மணப்பெண் அலங்காரத்துக்காக என்ன செய்வது என்று மண்டையை கசக்க வேண்டாம். உங்களை மேலும் அழகாக்கி, மண மேடையில் ஜொலிக்க வைக்க, இதோ இருக்கிறது பீட்ரூட்! கீழே உள்ள 2 சிகிச்சைகளையும் தொடர்ந்து செய்யுங்கள். `எப்படி வந்தது இந்தப் புது மெருகு’ என்று ஊரே விசாரிக்கும். 1. கமலா ஆரஞ்சு தோல் அரைத்த விழுது – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை தோல் அரைத்த விழுது...

 • தற்போது சருமத்தில் அலர்ஜி அதிகம் ஏற்படுகிறுது. சருமத்தில் ஆங்காங்கு தடிப்புக்களாக சிவப்பு நிறத்தில் இருப்பதோடு, அரிப்புக்களையும் ஏற்படுத்துவது தான் அலர்ஜி. அரிப்புக்கள் வர ஆரம்பித்தால், எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது. எப்போதும் சொரிந்து கொண்டே இருக்க வேண்டியவாறு இருக்கும். சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் சருமத்தில் அளவுக்கு அதிகமாக வறட்சி ஏற்படும் போது சருமம் அரிக்க ஆரம்பிக்கும். ஆனால் சருமத்தில் அரிப்புக்கள் அதிகமாகும் போது அது மிகவும் தீவிரமான பிரச்சனையையும்...

 • சில பெண்களின் உதட்டிற்கு மேல் மீசை போன்று முடி வளர ஆரம்பிக்கும். இப்படி பெண்களுக்கு மீசை வருவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன்கள் தான். பெண்களின் உடலில் ஆண் ஹார்மோன் அதிக அளவில் சுரக்க ஆரம்பித்தால், பெண்களுக்கு மீசை வர ஆரம்பிக்கும். பெண்களுக்கு மீசை வர ஆரம்பித்தால், அவர்களை அனைவரும் வித்தியாசமாக பார்க்க ஆரம்பிப்பார்கள். எனவே பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று உதட்டிற்கு மேல் உள்ள முடியை பிடுங்கி நீக்குவார்கள். பொதுவாக முடியை பிடுங்கினால் அவ்விடத்தில் முடி அதிக...