All videos of Tamil Beauty Tips - page 3

 • நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு பலரும் தங்களது வருத்தத்தையும், கோபத்தையும் வெளிக்காட்டி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமைக்கு மலையாள திரையுலகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பாவனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் திட்டமிட்டு மானபங்கப்படுத்தப்பட்டது ஏன் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாவனா தனது வருங்கால கணவரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து அவரின் அனுமதியுடனேயே போலீசில் புகார் அளித்ததாக மூத்த நடிகர் லால் தெரிவித்துள்ளார்.

 •  

 • ராகவா லாரன்ஸ் மக்களுக்காக சாலையில் இறங்கி போராடுபவர். இவர் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர் கலந்துக்கொண்டு இளைஞர்களுக்கு தன் ஆதரவை தெரிவித்தார். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்கு கிடைத்த வெற்றியை நேற்று பிரமாண்டமாக கேக் வெட்டி கொண்டாடினார். இதன் பிறகு பேசிய இவர் ‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் நான் பணம் வாங்கியப்படி எடிட் செய்து போடுகிறார்கள், அது மட்டுமின்றி ஒரு கட்சிக்கு நான் ஆதரவு தெரிவித்ததாக கூறுகிறார்கள். நான் எந்த கட்சிக்காவது...

 • பாவனாவின் கார் டிரைவரான பல்சர் சுனியால் அவர் மானப்பங்கபடுத்தப்பட்டது தற்போது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா ஒரு பேட்டியில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பல்சர் சுனி தன் மனைவி மேனகாவை கடத்த முயற்சி செய்தார். இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றார். பிரபல தயாரிப்பாளர் புகார் கொடுத்தே போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று புலம்பி வருகிறார்கள் மக்கள்.

 • மலையாள நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அவர் பெண் நீதிபதியிடம் தான் கற்பழிக்கப்பட்டிருப்பதாக ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன்படி தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் கார் டரைவர் மார்டின் முன்னாள் ட்ரைவர் சுனில் மற்றும் இன்னும் சிலர் கைது செய்யபட்டுள்ளனர். பாவனாவுக்கு இப்போது முழு பரிசோதனை நடந்து வருகிறது. முடிவுகள் வரும் போது தான் அவர் கற்பழிக்கப்பட்டிருக்கிறாரா என தெரியவரும். மேலும் இதில் பாவனாவுக்கு...

 • இனிப்பு மற்றும் பாலீஷ் செய்யப்பட்ட தானியங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, உணவுப் பண்பாட்டில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவது இவைதான் சர்க்கரைநோய் வருவதற்கு இன்றைக்கு முக்கிய காரணங்கள்.  சர்க்கரை நோயாளிகள் எதைச் சாப்பிடுவது நல்லது, எதைத் தவிர்க்கலாம்… தெரிந்துகொள்வோமா?  சர்க்கரைநோய்க்கு அரிசி எதிரி என்பது உண்மையல்ல. இயற்கையான முறையில் விளைந்த பாரம்பர்ய கைக்குத்தல் அரிசி ரகங்கள் பெரும்பாலும் லோ கிளைசமிக் தன்மை உடையவை. வேகமாக ரத்தத்தில் சர்க்கரையைச் சேர்க்காதவை. கூடுதலாகக் கிடைக்கும் நார்ப் பொருளும்,...

 • குண்டு உடல்வாகோடு, உடல் எடை அதிகமாகி உடல்பருமனுக்கு ஆளாவது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ, அதேபோல தீவிரம்கொண்டது எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பது!  அப்படி மெலிந்திருப்பவர்கள், உடல் எடையை அதிகரிக்க வேண்டியதும் அவசியமே!  வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம். சிக்ஸ்பேக் வரவழைக்கிறேன் பேர்வழி என ஆண்களும், மெல்லிடை வேண்டும் எனப் பெண்களும் எடை குறைத்து, உடல் மெலிந்து வருவது இன்று அதிகமாகிவருகிறது. `எனக்குள் என்ன நடக்கிறது?’ என்ற அறிவும் அக்கறையும் ஒவ்வொருவரிடமும்...

 • உடல் எடையைக் குறைக்க பேலியோ, வீகன், மெடிட்டரேனியன் என எத்தனையோ டயட் முறைகள்..! ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்த்தாலும், வெயிட் லாஸ் என்பது தூர நின்று நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதுதான் ரிசல்ட்! இதற்கு முக்கியக் காரணம், பலருக்கும் சாப்பிடும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாதது. எப்பாடுபட்டாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  ஜிம்முக்குச் சென்றாலும், இரண்டு மாதங்களில் உடல்வலி காரணமாக பலர் அந்த முயற்சியைக் கைவிட்டிருப்பார்கள். இந்த முயற்சிகளில் தோல்வியடைந்தவர்களுக்கு மிஞ்சுவதென்னவோ பண நஷ்டமும்...

 • உடலில் 70 சதவிகிதம் அளவுக்கு நீர் இருக்கிறது. செல்கள், செல்களின் வெளிப்புறம், ப்ளாஸ்மா, ரத்தம், உமிழ்நீர் என பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும் நம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம்.    *குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடலில் அதிக அளவில் நீர் இருக்கும். *அடுத்ததாக, ஆண்களுக்கு அதிக அளவில் இருக்கும். *ஆனால், பெண்களுக்கு குழந்தைகளைவிடவும் ஆண்களைவிடவும் குறைவான அளவிலேயே உடலில் நீர் இருக்கும். இதனால் பெண்கள் அதிக அளவில் நீரை அருந்தவேண்டும். தண்ணீர் ஏன் தேவை? செல்கள் உருவாக,...

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 •  

 • காதல் தவிர்க்க முடியாதது. இயற்கையும்கூட. பசி, தாகம்போல காதலும் நமக்கான உணர்வுதான். நமக்கான உரிமை அது. அனைத்து உயிர்களின் இலக்கும் ஏதோ ஒரு வழியில் காதலைச் சுற்றியே நகர்ந்துகொண்டிருக்கும். அன்பின் பிணைப்பில் ஆசைதீரக் காதலிக்கத் தூய மனதும், சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலைத் தூண்டும் காதல் உணவுகள் பற்றிப் பார்ப்போமா… ஆப்பிள் ஆப்பிளில் உள்ள பைட்டோஈஸ்ட்ரொஜென் (Phytoestrogens), பாலிபீனால்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆகியவை பாலியல் உறவின்போது, உடலுக்கு அதிக சக்தியைத் தரக்கூடியவை. இது, பெண்களுக்கு மிகவும்...

 • கணவனும் மனைவியும் நண்பர்களைப் போன்றவர்கள். அதேசமயம் நண்பர்களைவிடவும் மேலானவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இருவருக்குமான புரிதலும் நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். கணவனும் மனைவியும் இணைந்து இனிமையாக வாழ வேண்டுமென்றால் அவர்களுக்குள் பரஸ்பர புரிதல் இருக்க வேண்டும். கீழ்வரும் சில செயல்பாடுகளைச் செய்வதின் மூலம் கணவன் மனைவிக்கு இடையே உள்ள நெருக்கம் அதிகரிக்கும். குறிப்பாக, ஆணுக்குப் பெண்கள் மீதான் அன்பும் காதலும் பெருகும்.   கணவன் எவ்வளவு சோகமாகவோ வருத்தமாகவோ இருந்தாலும் அவர்களைின் முகத்தில் புன்னகை...

 • ”கணவன், மனைவி ஒற்றுமைக்கு இனிய தாம்பத்யமே ஆணி வேர். அந்த உறவு இருவருக்குமே சந்தோஷம் அளிப்பதாக திகழ்ந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது” என்கிறார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் அமுதா. தாம்பத்யம் தென்றலாக, பூங்காற்றாக திகழ அவர் தரும் டிப்ஸ்… * ஆணின் மனநிலை மற்றும் உடல்நிலை எப்படி இருக்கும் என்பதை பெண்ணும், பெண்ணின் மனநிலை மற்றும் உடல்நிலை எப்படி இருக்கும் என்பதை ஆணும் புரிந்துகொள்ள வேண்டும். * நிறைய பெண்களுக்கு செக்ஸ் பற்றிய...

 • மாசு, மருவற்ற சருமம்… இதுதான் அனைவரின் விருப்பம். முகமும் சருமமும் பொலிவோடு இருக்க, இன்றைக்குப் பலரும் பல வழிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். மார்க்கெட்டில் கிடைக்கும் புதுப் புது கிரீம்களைப் பூசிக்கொள்வது, பார்லருக்குச் செல்வது, வெயிலுக்கு பயந்து வெளியே செல்லாமல் ஏசியிலேயே கிடப்பது… என நீள்கின்றன அவர்களின் முயற்சிகள். உண்மையில், இவற்றையெல்லாம் பின்பற்றுவதால் மட்டும் நாம் விரும்பும் சருமப் பொலிவு கிடைத்துவிடாது. நம் சருமம் இயற்கையாகவே பளபளப்பாக இருக்க, மினுமினுக்க நாம் பெரிதாக எதையும் மெனக்கெடவேண்டிய அவசியமில்லை. அன்றாடம் செய்கிற...

 • அனைவரையுமே எளிதாக தாக்கக்கூடிய ஆயுதம் புன்னகை. ஆனால், அந்த ஆயுதத்தால் நாம் பறிப்பதோ அன்பையும் நேசத்தையும். `அந்தப் புன்னகையின்போது பற்கள் முத்துப்போல் பளிச்சிட்டால்தானே அழகு!’ என்பது பலரின் எண்ணம். அதில் சிறிது உண்மையும் உண்டு. பற்கள் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால், சிலருக்கு தன்னம்பிக்கையே சமயத்தில் நொறுங்கிவிடும். இங்கே, மஞ்சள் பற்களை வெண்மையாக மாற்றுவதற்கு எட்டு எளிய வழிமுறைகளைக் கூறுகிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்… * வெட்பாலை இலை தினமும் இரு வேளை வெட்பாலை இலைகளைப் பறித்துத்...

 • உடலை நல்ல ஆரோக்கியத்தோடு வைத்திருக்கவேண்டியது நம் கடமை. தவறினால், மனதை உறுதியாகவும் தெளிவாகவும் நம்மால் வைத்திருக்க இயலாமல் போய்விடும்’ என்கிறார் புத்தர். அத்தனை பேருக்குமே ஆரோக்கியம் அவசியம். குறிப்பாக பெண்களுக்கு மிக மிக அவசியம்.  ஓர் ஆணிடம், `வேலை எப்படி போய்க்கிட்டு இருக்கு?’ என்று கேட்டுப் பாருங்கள். `எட்டு மணி நேர வேலைதான். ஆனா முடியலை… தாவு தீர்ந்துபோயிடுது’ என்று வருகிற பதில் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் அல்ல இன்றைக்கு அரசுத் துறையில்...

 • சந்தையில் கிடைப்பவை அத்தனையும் சுத்தமான பழங்கள் அல்ல. அவற்றில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இருக்கலாம்; ரசாயனம் கலக்கப்பட்டிருக்கலாம். எனவே, பழங்களைச் சுத்தப்படுத்திவிட்டுப் பயன்படுத்துவதே சிறந்த வழிமுறை. பழங்களைச் சுத்தப்படுத்துவதற்கு இங்கே ஆறு எளிய வழிமுறைகள்… * பழங்களின் மேல் தோலில் படிந்திருக்கும் பூச்சி மருந்துப் படலம், பழத்தின் வீரியத்தைக் குறைத்துவிடும். மிதமான சூடுள்ள வெந்நீரால் பழங்களைக் கழுவினால், பூச்சி மருந்துப் படலம் முழுதாக நீங்கவில்லை என்றாலும், அதன் தாக்கம் குறையும். இதற்கு, அதிகச் சூடான வெந்நீரைப் பயன்படுத்தக் கூடாது. ...

 •  

 •  

 •  

 •