All videos of Tamil Beauty Tips - page 88

 • சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும். இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். ஷேவிங் வேக்ஸிங் செய்வதால் முடி வளர்ச்சி தூண்டிவிடப்பட்டு அடர்த்தியாக வளரவும் வாய்ப்புகள் உண்டு என்பதை பெண்கள் மறந்துவிட கூடாது. சில மருத்துவ நிலைகள், மற்றும் உட்கொள்ளும் சில மருந்துகளின் காரணங்களால் கூட...

 • சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது. நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. பூண்டில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன.   இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித...

 • கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள். உடல் நலம் காக்கவும், உடலின் சில முக்கிய பணிகளைச் செய்யவும் நமது உடலில் உள்ள கல்லீரல் 80% அளவுக்கு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால், இது நாம் சாப்பிடும் அசைவ உணவுகளினால் உற்பத்தி ஆகின்றது. எனவே நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் பல பிரச்சனைக்கு ஆளாகின்றோம்.   இந்த பிரச்சனைகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள...

 • நரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம். நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம். நீங்கள் கெமிக்கல் டை உபயோகிக்காத வரை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது...

 • வெள்ளைத் தோலைப் பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது. ஒவ்வொருவரும் தாங்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று தான் விரும்புகிறோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களை தினமும் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் எப்பலனும் கிடைத்தபாடில்லை. மேலும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவதால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடும். ஆனால் சரும நிறத்தை அதிகரிக்க இயற்கை வழிகளை நாடினால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்....

 • சென்னை: ராதிகா சரத்குமாரின் மகள் ரயானின் திருமணத்திற்கு சண்டைக்கோழி விஷால் அன்ட் கோ வரவில்லை. ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் தனது காதலரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் விமரிசையாக நடந்தது. [கோலாகலமாக நடைபெற்ற ராதிகா மகள் திருமணம்- குவிந்த நட்சத்திரங்கள்] திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் வந்திருந்தனர் . சூர்யா, ஜோதிகா நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் திருமணத்திற்கு வந்து ரயான்,...

 • சென்னை: தற்கொலை செய்து கொள்வதற்காக மாடியிலிருந்து கீழே குதித்தார் ஆட்டோ டிரைவர். ஆனால் கீழே நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு பாட்டி மீது விழுந்து அந்த பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் செல்வம். அங்குள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். 35 வயதான இவருக்கும், மனைவிக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த செல்வம் தற்கொலை செய்வதற்காக மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். ஆனால் அப்போது கீழே...

 •   பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்த பெயர் பெப்சி உமா. காலஓட்டத்தில் ஜெயா தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளினியாக இடம் பெயர்ந்து சின்னத்திரை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் இவர். இந்நிலையில்தான், ஜெயா டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் சீனியரான மதுரை சரவணராஜன் மீது “பெண் வன்கொடுமை’  தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார் உமா. புகாரை வாபஸ் பெறும்படி சரவணராஜன் குடும்பமே வந்து கெஞ்சிய நிலையிலும் உமா மறுத்துவிட… அன்றிரவே ஆதம்பாக்கத்திலுள்ள வீட்டில்  வைத்து சரவணராஜனை...

 • இன்றைய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மிக எளிதாக ஓட்டுவதற்கான சிறந்த போக்குவரத்து சாதனம் என்றால் ஸ்கூட்டர்கள்தான். இருபாலரும் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்கள், பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, பட்ஜெட் விலை போன்ற விஷயங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. ஆனால், மைலேஜ் என்று வரும்போது பைக்குகளுடன் ஒப்பிடும்போது ஸ்கூட்டர்கள் குறைவாக இருப்பதுதான் வாடிக்கையாளர்களை தயங்க செய்யும் விஷயம். இந்தநிலையில், அதிக மைலேஜ் தருவதோடு, மதிப்பிலும் சிறந்த 6 ஸ்கூட்டர்கள் பற்றியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 01. ஹோண்டா...

 • தனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இயக்குனர் விஜய் உறவில் விரிசல் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்த விரிசலுக்கு நடிகர் தனுஷும் காரணம் என கிசுகிசுக்கபட்டது. இந்நிலையில் தனுஷின் வடசென்னை படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா கூறியதாக தெரிகிறது. ஆனால் தனுஷ்...

 • சின்னத்திரயில் மிகவும் பேமஸான தொகுப்பாளர் ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார். இவரின் டுவிட்டர் ஐடியை கடந்த 10 மணி நேரம் யாரோ ஹாக் செய்துவிட்டார்கள், அதிலிருந்து ஒரு சில டுவிட் மற்ற பிரபலங்களுக்கு சென்றுள்ளது.(கொஞ்சம் தவறான வார்த்தைகளுடன்) இதனால், மிகவும் வருத்தத்தில் ஒரு சில கருத்துக்களை இன்று அவரே வெளியிட்டுள்ளார், இதோ அந்த டுவிட்..

 • அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு பலராலும் பாராட்டப்பட்டவர். இவர் சமீபத்தில் ராதிகா தன் மகள் திருமணத்திற்கு கொடுத்த மது விருந்தில் கலந்துக்கொண்டார்.   அப்போது நிதானம் இழந்த அருண் விஜய் வண்டியை போலிஸ் கார் மீதே மோதி விபத்து ஏற்படுத்தினார்.இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட கூறியுள்ளனர், ஆனால், இன்று வரை அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாகவே இவர் தலை மறைவாக தான் இருப்பதாக கூறப்படுகின்றது....

 • ராதிகா சரத்குமாரின் மகள் ராயன் மற்றும் கர்நாடக கிரிக்கெட் வீரர் அபிமன்யுவுக்கும் நேற்று மகாபலிபுரத்தில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இவரது திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. நடசத்திர தம்பதியான ராதிகா சரத்குமாரின் மகள் திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் தம்பதிகளாக வந்து விழாவை சிறப்பித்தனர். அரசியல் பிரமுகர்களில் இருந்து சினிமா, டிவி நட்சத்திரங்கள் வரை பலரும் இந்த திருமண விழாவில் பங்கெடுத்துக் கொண்டனர். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ராம்கி –...

 • ராதிகாவின் மகள் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டனர்.   ஆனால், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் விஷால், கார்த்தி, நாசர் எல்லாம் ஆப்செண்ட், அவர்களுக்கு அழைப்பே போகவில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியே இந்த திருமணத்திற்கு போகாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.அவர் விஷால் மீது கொண்ட அன்பினால் தான் இந்த திருமணத்தை புறக்கணித்தார் என்று கிசுகிசுக்கப்படுகின்றது. அதை நிரூபிக்கும் பொருட்டு இன்று விஷால்...

 • தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தனா மஞ்ச்சியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பஹ்ரைனின் பிரதமரும்...

 •  

 •  

 •  

 • நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் கிரிக்கெட் வீரர் மிதுனை சில வருடமாக காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்தோடு இன்று இவர்களின் திருமணம் இன்று நடந்து முடிந்தது.இதில் விக்ரம், மணிரத்னம், சுஹாசினி, பிரபு, சிவகார்த்திகேயன், காயத்ரி ரகுராம், வித்யூலேகா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். அது மட்டுமின்றி ஆந்திர சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் நேரில் வந்து தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 • கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் விஷயம் விஜய்-அமலாபால் விவாகரத்து. இந்த விவாகரத்தால் அமலாபால் நடிக்கவிருந்த சில படங்கள் கைவிட்டு போனது. தற்போதைக்கு வடசென்னை மட்டுமே கையில் உள்ளது. இந்நிலையில் விஜய் இயக்கும் தேவி படத்தில் அமலாபாலின் தம்பி அபிஜித் பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது இந்த விவாகரத்தில் அமலாபால் மீதுள்ள கோபத்தால் அவரின் தம்பி நடித்த காட்சிகளை கத்தரிக்கவுள்ளாராம்

 • முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இந்த சுரப்பிகள் தூசு, அழுக்கு போன்றவற்றால் அடைபடும் போது கிருமி தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் ஏற்படுகின்றன. முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டுப் பார்க்க கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று...

 • உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்வதை தற்காலத்து இளம் பெண்கள் விரும்புகின்றனர். இதற்காக பார்லர்களுக்குச் சென்று வேக்சிங் செய்து கொள்வதோ அல்லது வீட்டில் இருந்தபடியே கடைகளில் கெமிக்கல் கலந்து விற்கப்படும் கிரீம்களையோ பயன்படுத்துகின்றனர். வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். இது பெரும்பாலானோர் நினைப்பது போல் நவீன முறை அல்ல. எகிப்திய பெண்கள் தங்கள் உடலில் சிறு முடிகளை நீக்க பயன்படுத்திய பண்டைய முறையே ஆகும்....

 • 2 அடி கூந்தலை வைத்துக் கொண்டு எல்லாரும் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த காலத்தில் எளிதில் உபயோகிக்கும் ஷாம்பு கூட இல்லாமல் இயற்கை மூலிகைகளைக் கொண்டு எப்படி கூந்தலை பராமரித்தார்கள். நாம் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற வேண்டுமென கூந்தலின் தன்மையை கெடுத்துவிடுகிறோம். ஷாம்புக்களினாலும், கெமிக்கல் ஹேர் ஸ்ப்ரேக்களாலும் கூந்தல் வறட்சியை அடைந்து சிக்கலைகிறது. ஜீவனில்லாமல் ஏனோ தானோவென்றாகிவிடுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண் நீங்களே இயற்கையான முறையில் ஸ்ப்ரே வை தயாரிக்கலாம். இவை கூந்தலுக்கு...